ரூ.15 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் பயன்பாடின்றி வீண்.. நெல்லையில் அவலம்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம், சிறிய திரையரங்குகள் பயன்பாடின்றி வீணாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திறப்பு விழாவுடன் முடங்கிய இந்த மையம் இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை டவுன் வயல் தெருவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு வசதிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் மற்றும் இரண்டு சிறிய திரையரங்குகள், திறப்பு விழா முடிந்து இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் முறையாக பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Nellai Play Centre

நெல்லை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக நெல்லை டவுன் வயல் தெருவில் குழந்தைகள் விளையாடுவதற்கான மையம் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக இரண்டு சிறிய திரையரங்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சுமார் ரூ.15 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வளாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனால் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட இடம் தற்போது விளையாடுவதற்கே தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. அதேபோல், இரண்டு சிறிய திரையரங்குகளும் பயன்பாடின்றி கிடப்பதால் அவற்றின் கண்ணாடிகள், கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் இந்த வளாகம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் மது அருந்தும் இடமாகவும் இந்த வளாகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட ஒரு பொது பயன்பாட்டு வளாகம், திறப்பு விழாவுக்குப் பிறகு உரிய பராமரிப்பும் கண்காணிப்பும் இன்றி சீரழிந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. திட்டங்களை அறிவிப்பதும், கட்டிடங்களை கட்டி திறந்து வைப்பதும் மட்டுமே வளர்ச்சிப் பணிகளாகிவிடாது. அவை மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து கொண்டுவரப்படுவதுடன், முறையான பராமரிப்பும் அவசியம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

எனவே, நெல்லை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சேதமடைந்த கண்ணாடிகள், கதவுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்துவதுடன், இரண்டு சிறிய திரையரங்குகளையும் முறையாக ஏலம் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட மக்கள் பயன்பாட்டு வளாகம், திறப்பு விழாவோடு தனது பணியை முடித்துக் கொண்டதா? மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் மக்களுக்குப் பயன்படுவது எப்போது? என்பதே தற்போது நெல்லை டவுன் பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+