தவெக கட்சி ஆபீஸ் வாசலில் அஜிதா தர்ணா.. பின்வாசல் வழியாக நைசாக எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்
சென்னை: சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலக வாசல் முன்பு அமர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் பின்வாசல் வழியாக பனையூர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அஜிதா பனையூர் தலைமை அலுவலகம் முன் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்து வரும் நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறி வரும் தவெகவினர் அஜிதாவுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தவெக பெண் நிர்வாகி தர்ணா
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் நியமனம் செய்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய மாவட்ட செயலாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என அஜிதா ஆக்னஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விஜய் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தன்னை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விஜய் காரை மறித்த நிலையில் காரை நிறுத்தாமல் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அஜிதா தவெக தலைமை அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்களும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் வாசல் வழியாக சென்ற புஸ்ஸி
அப்போது நிர்மல் குமார் அஜிதாவை உள்ளே வருமாறு அழைத்த நிலையில் விஜய் வந்து அழைத்தால் தான் வருவோம் என அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் 2 ஆண்டுகளாக கட்சி பணிகளை செய்து வந்த எங்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்றும் விஜய் வந்து பேச வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்.. சாகும் வரைக்கும் இந்த இடத்தில் தான் இருப்போம் என கட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான் தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் பின்வாசல் வழியாக கட்சி அலுவலத்தில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அஜிதா பனையூர் தலைமை அலுவலகம் முன் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்து வரும் நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறி வரும் தவெகவினர் அஜிதாவுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications