கமல் வீட்டில் பஞ்சாயத்து.. யாரும் நம்பாதீங்க! திடீரென அக்ஷரா ஹாசன் வார்னிங்! ஊட்டி ஆபீசில் கல்பிரிட்
சென்னை: தன் பெயரையும், தனது தந்தையின் பெயரையும் பயன்படுத்தி மோசடி நடப்பதாகவும் தன்னை பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனக் கூறி அதிர வைத்திருக்கிறார் நடிகர் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன். குறிப்பிட்ட நபர் தன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்வதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.
நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறாத நிலையில் எதிர்மறை விமர்சனங்களால் கமலஹாசனின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கமலஹாசன், சிம்பு, மணிரத்தினம் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவற்றையெல்லாம் தவிடு பொடி ஆக்கி உள்ளது. இந்த நிலையில் தான் கமலஹாசன் வீட்டில் இருந்து ஒரு பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது.

கமலஹாசனை போலவே அவரது வீட்டில் இருக்கும் இரு மகள்களும் சினிமா துறையில் தான் இருக்கின்றனர். நடிகை சுருதிஹாசன் மீண்டும் சினிமா துறையில் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் அவர் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அக்ஷரா ஹாசன் இதுவரை எந்தவித செய்திகளிலும் அடிபடாமல் இருந்தார். இந்த நிலையில் தான் தன் பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பதாகவும், தனது ரசிகர்களும் சினிமா துறையினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதாவது இப்ராஹிம் அக்தர் என்பவர் ஊட்டியில் ஒரு அலுவலகத்தை நடத்தி வருவதாகவும் தனது குடும்பத்தின் பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியதாக அக்ஷரா ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எங்களுக்கும் அந்த நபருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அந்த நபருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என அக்ஷரா ஹாசன் கூறியிருக்கிறார்.
திடீரென அக்ஷரா ஹாசன் அந்த நபரை குறிப்பிட்டு புகார் அளிக்க என்ன காரணம் என விசாரித்த போது சில தகவல் கிடைத்தது. தற்போது கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மூலம் தான் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. மேலும் அமரன் திரைப்படத்தையும் அந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.
இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் நடிகர் நடிகைகள் தேர்வு செய்வதாக மோசடி நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது. இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் தான் அக்ஷரா ஹாசன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஊட்டியில் அலுவலகம் நடத்தி வரும் இப்ராஹிம் அக்தர் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறதாகவும் ,நடிகர் நடிகைகள் தேவை என விளம்பரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பணம் கேட்பதாகவும், தயாரிப்பாளர்கள் சிலரை தொடர்பு கொண்டு பணம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த புகார்கள் அக்ஷரா ஹாசரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தான் தற்போது இந்த எச்சரிக்கை பதிவை வெளியிட்டிருக்கிறார்.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications