சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒற்றுமைய கவனிச்சீங்களா? இங்க ரஜினிகாந்த்.. அங்க அக்‌ஷய் குமார்

Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கியதைபோல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் விருது பெற்று உள்ளார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது முதல் நிதியமைச்சராக பதவி வகித்தவர் சர் ஜேம்ஸ் வில்சன்.

இவர் கடந்த 157 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நாட்டின் முதல் நிதி அமைச்சராக பதவியேற்று வருமான வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தார்.

அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்! அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்!

வருமான வரி

வருமான வரி

அப்போது செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அவர் வரி விதித்தது பலரது கோபத்தை ஏற்படுத்தியது. முதன்முதலில் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டப்போது அரசுக்கு ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக வளர்ந்து நிற்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே வரி விதிப்பு இருந்தாலும் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய வருமான வரி முறையே தற்போது சட்டத் திருத்தங்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

வருமான வரி விழா

வருமான வரி விழா

வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 ரஜினிக்கு விருது

ரஜினிக்கு விருது

இந்த நிலையில் நேற்று முந்தினம் சென்னையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரி செலுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவிடம் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருதை வழங்கி கவுரவித்தார்.

அக்‌ஷய் குமாருக்கு விருது

அக்‌ஷய் குமாருக்கு விருது

இதே போல் முன்னணி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் வருமான வரித்துறை பாராட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. பிரிட்டனில் படப்பிடிப்புக்காக அக்‌ஷய் குமார் சென்று இருக்கும் நிலையில், அவரது குழுவினர் வருமான வரித்துறை வழங்கிய பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளாக அதிகம் வருமான வரி செலுத்துபவர்கள் பட்டியலில் அக்‌ஷய் குமார் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

English summary
Akshay Kumar received highest tax payer award like Rajinikanth in Tamilnadu: வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கியதைபோல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் விருது பெற்று உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X