ஆகவே ஆகாது.. அட்சய திருதியை நன்னாளில் ‘இந்த’ பொருட்களை மறந்தும் தொடாதீங்க! லிஸ்ட் இதோ!
சென்னை: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் உள்ளிட்டவற்றை வாங்குவது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதே நேரத்தில் இந்த நாளில் இந்து மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி சில பொருட்களை வாங்குவது அசுபமானதாக கருதப்படுகிறது. இது போன்ற பொருட்கள் வீட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த நாளில் வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்..
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாவது தினம் திருதியை திதியில் வரும். அந்த நாள் அக்ஷய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்கி, குபேரனை நோக்கி கேட்டால் கேட்டது கிடைக்கும் என்றது. நம்பிக்கை இந்த ஆண்டு அட்சய திருதியை நேற்று காலை தொடங்கி இன்று மதியம் 2.12 வரை தொடர்கிறது.
இந்த நாளில் தங்கம் வெள்ளி உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கினால் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. அதே நேரத்தில் அக்ஷய திருதியை நாளில் இந்து மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை வாங்கவே கூடாது. அது போன்ற பொருட்களை வீட்டில் வைக்கும் போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த நாளில் வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன? அசுபமானதாக கருதப்படும் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

பயன்படுத்தப்பட்ட அல்லது செகண்ட் ஹேண்ட் எனப்படும் பழைய வாகனங்கள் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதை இன்று தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே வைத்திருந்தவர் எதிர்மறையான ஆற்றலை இது வீட்டுக்கு கொண்டு வரும் என்பதால் இந்த நாளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட தோல் பொருட்களை வாங்குவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இந்த புனிதமான நாளில் விலங்குகளை கொன்று அதன் உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தோல் பொருட்களை வாங்கினால் நம் வீட்டில் இருந்து செல்வம் பிரித்து எடுத்துக் கொண்டு போகும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருப்பதால் இன்று தோல் பொருள்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதே போல செயற்கை சாயங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை இயற்கையான ஆன்மீக ஆற்றலுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் மேக்கப் ஐட்டங்கள், பவுடர், லிப்ஸ்டிக், பெயிண்ட், பிளாஸ்டிக் சேர்கள் உள்ளிட்டவற்றை தொடவே கூடாது.
சனி பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படும் இரும்பு பொருட்களை இன்று வாங்குவதை தவிர்க்க வேண்டும். இரும்பு பொருட்கள் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் என்பதே.. மேலும், இன்று லட்சுமிதேவி வீட்டுக்கு வரும் நாள் என்பதால் சனி பகவான் தொடர்புடைய இரும்பு பொருட்களை வாங்கவே கூடாது என்கின்றனர். மேலும் எவர்சில்வர் பாத்திரங்கள், இரும்பு சட்டிகள், கட்டிட பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
அக்ஷய திருதியை நாளில் செல்வத்தையும் நேர்மறையான ஆற்றலையும் பெருக்குவதற்காக தான் தங்கம், வெள்ளி, உப்பு, அரிசி, புதிய ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வாங்க வேண்டும். இது எல்லாம் பாரம்பரியமாக மக்கள் நம்பி வரும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் இது தனிப்பட்ட பார்வை இருக்கலாம். இந்த நாளில் எதை வாங்குவது என்பதை முடிவு செய்யும் முன் உங்கள் குடும்பத்தினரின் மரபுகள், ஆன்மீக ஆலோசகர் ஆகியோரின் வழிகாட்டுதலை கேட்டுக் கொள்வதும் நல்லது.












Click it and Unblock the Notifications