பஸ்ல சொந்த ஊருக்கு போறீங்களா.. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகாரளிக்க அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செல்போன் எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது நடக்கிறது. சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லவும், மற்ற ஊர்களில் இருந்தும் சென்னைக்கும் வருவதற்கும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு போக 1500 முதல் 2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கிட்டத்தட்ட இதேபோல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் உள்ளது. இதேபோல் வரும் திங்கள் முதல் புதன் வரையிலும் டிக்கெட் கட்டணம் மதுரையில் இருந்து சென்னைக்கு இதேபோல் தான் 1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது. வழக்கமாக 1000 வரையில் இருக்கும் பேருந்து கட்டணம் விடுமுறை நாட்களில் அதிகமாகவே உள்ளது.
மதுரை வழித்தடத்தில் மட்டுமல்ல, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வழக்கமான நாட்களை விட அதிகமாகவே உள்ளது. அங்குமே 1000 ரூபாய் என்று இருக்கும் கட்டணம், 2000 அல்லது 2500 வரை அதிகமாகவே உள்ளது.
இதனிடையே பண்டிகை காலத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய வசதி அளிக்கப்படுவதில்லை என்றும் ஆம்னி பேருந்துகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்னி பேருந்துகளுக்கென்று மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன விதிகள் படி, கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை..
எனினும், பயணிகளின் நலன் கருதியும், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படாத வகையிலும் சங்கங்களே அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்காத வகையில் கண்காணித்து, மீறுவோரை அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.
ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்கள் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, கட்டண புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம் " இவ்வாறு கூறியுள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது போல் அரசு இதுவரைஆம்னி பேருந்துகளுக்கு எந்தவிதமான கட்டணமும் மற்ற பேருந்துகளை போல் நிர்ணயம் செய்யவில்லை. அரசு இதுபற்றி நிர்ணயம் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இதுபற்றி ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சிலர் கூறும் போது, ஆம்னி பேருந்துள் வாரஇறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் கட்டணம் குறைவாக இருக்கும். வாரஇறுதி நாட்கள் மட்டுமே பேருந்துகள் லாபகரமாக இயங்கும். இந்த சூழலில் மக்களின் தேவையை பொறுத்தே டிக்கெட் கட்டணம் இருக்கிறது என்றார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications