காவி மேடையில் திராவிட நாகரீகம்.. மோடிக்கு செங்கோல் கொடுத்து அசத்திய தலைவர்கள்!
பாஜக சார்பாக சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் வருகை புரிந்துள்ளனர்.
சென்னை: பாஜக சார்பாக சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் வருகை புரிந்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்து உள்ளார். இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏறி இருக்கிறது.

ஒரே மேடையில் அமர்ந்தனர்
இதில் ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள் எல்லோரையும் மேடை ஏற்றியது பாஜக. பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஒரே மேடையில் உள்ளனர்

பெரிய செங்கோல்
பிரதமர் மோடிக்கு விழாவில் பெரிய செங்கோல் பரிசளிக்கப்பட்டது. அனைத்து கூட்டணி தலைவர்களும் இந்த பரிசளிப்பின் போது உடன் இருந்தனர். முதல்வர் இந்த செங்கோலை வழங்கினார். இந்த செங்கோல் ஆளுயர அளவிற்கு பெரிதாக இருந்தது.

படங்கள் திறக்கப்பட்டது
அதன்பின் விழாவின் ஒரு பகுதியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அங்கிருந்த தலைவர்கள் இவர்களின் புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தினார்கள். பிரதமர் மோடியும் இவர்களுக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினார்.

சிலைகள்
அதன்பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மோடிக்கு வழங்கினார். அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடராஜர் சிலையை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications