10% இடஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.. அனைத்து கட்சி கூட்டத்தில் 10 கட்சிகளும் ஆதரவு!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அளித்தது. இதற்கு தமிழக அளவில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்
இதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

சீராய்வு மனு
பின்னர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் கலந்துகொண்டன. இதில் அனைத்து கட்சிகளும் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆதரவு அளித்துள்ளார்கள்.

சமூகநீதியில் ஒருமித்த கருத்து
அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளவில்லை. சமூகநீதி கொள்கையில் காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து முன்னாள் முதலமைச்சர்களுக்கும் ஒருமித்த கருத்து இருந்தது. 10% இடஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, அதிமுகவின் தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

அனைத்து கட்சிகளும் ஆதரவு
ஆனால் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 10% இடஒதுக்கீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது. அனைத்து கட்சிகளும் சமூக நீதி கொள்கைக்கு எதிராக உள்ள 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் தெளிவாக இதற்கு ஆதரவளித்துள்ளனர்.

அதிமுக பங்கேற்காதது வருத்தம்
இதில் அதிமுகவும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் 90% மக்கள் சமூக நீதி கொள்கைக்கு கீழ் வருவார்கள். மீதமுள்ள 10% பேருக்காக அதிமுக நிற்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய சட்டரீதியாக வாய்ப்பு இல்லை. அதனால் அனைத்து கட்சிகளின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அமலுக்கு வராது
தமிழ்நாட்டை பொறுத்தவரை 69% இடஒதுக்கீடு மட்டுமே இருக்கும். உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட மாட்டாது. 10% இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக இல்லை என்று தெரிவித்தார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications