தமிழக பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்.. பொன்முடி உறுதி.. செயல்படுத்த முடியுமா?
சென்னை: உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தமிழக உயர்கல்வி மன்றம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இம்முறையினையே பல்கலைகழகங்கள் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதற்கு பல்கலைகழகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் மார்ச் மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் முடிவு செய்யலாம். 75 சதவீத பாடத்திட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த இயக்கத்திற்கு மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா போன்ற உயர்நிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஆதரவு உள்ளது.
தமிழ்நாட்டில், 13 பல்கலைக்கழகங்கள் அவற்றின் சொந்த சிறப்புச் சட்டங்களின் கீழ் இயங்குகின்றன, அவற்றின் கல்வி அமைப்புகளான செனட், சிண்டிகேட், கல்வி கவுன்சில் மற்றும் பாடத்திட்டத்தை வடிவமைக்க ஒரு ஆய்வு வாரியம் போன்றவை உள்ளன. ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது இந்த அமைப்புகளின் சுயாட்சியை ஆக்கிரமிப்பதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரே பாடத்திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி ஆசிரியர்களின் கூட்டுக்குழுவான ஜாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாகராஜன், ஒரே பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் என்ற அமைச்சரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் யு.ஜி.சி.விதிகளையும் ,தமிழகத்தில் ஒவ்வொரு பல்கலைக்கும் உரிய தனிப்பட்ட சட்டங்களை மீறுவதாக இந்த ஒரே பாடத்திட்ட நடவடிக்கை உள்ளதாக கூறினார். பல்கலைகழக மானிய குழுவான யு.ஜி.சி.வழங்கிய ,உயர் கல்வி நிறுவனம் தன்னாட்சி அதிகாரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் வகையில்,ஒரே பாடத்திட்ட நடவடிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே பாடத்திட்ட முறையினை எந்த பல்கலையும் ஏற்காது.கல்லூரியும் ஏற்றுக்கொள்ளாது.ஒவ்வொரு பல்கலையும் அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மொழி,கலை,புவியியல்,இலக்கியம்,வேளாண்மை மற்றும் வாழ்வியல் சூழ்நிலைக்கு ஏற்ப அறிவியல் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் நாகராஜன் கூறியுள்ளார்.
இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றபடும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரை, தேர்வு செய்ய குழு அமைத்து வெளிப்படையாக தேர்வு செய்ய வேண்டும், பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒரே மாதிரியான ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று கூறினார். 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. மாணவர்களும் , பேராசிரியர்களும் கல்லூரி மாறும்போது ஒரே பாடத்திட்டம் பயனளிக்கும்.. காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதால் பேராசிரியர்கள் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications