உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.. ஜி.கே.வாசன்
சென்னை: உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை, நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார் அதில் வாக்காளர்களை மாநிலம், கட்சி, பிரபலமானவர் என்ற அடிப்படையில் பிரித்து பார்க்க கூடாது அனைத்து வாக்காளர்களையும் ஒரே கோணத்தில் பார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் பிரபலமானவர், வசதி படைத்தவர், அரசியல்வாதி என்பதற்காக அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது உரிய ஆவணங்கள் இருந்தால் நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரபலமானவர்கள் என்பதற்காக வாக்களிக்க அனுமதிக்காமல், தேர்தல் கோட்பாடுகளை முறையாக கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications