எல்லாமே வெளிச்சத்திற்கு வரப்போகுது! சூரியனை நோக்கி ஆதித்யா L1 எப்படி செல்லும்? என்ன ஆய்வு செய்யும்?
சென்னை: இன்று காலை சூரியனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்தை சுமந்து PSLV-C57 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது. சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.
எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.

கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.
நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 கருவிகள் இதில் சுமந்து செல்லப்பட உள்ளன. மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல அமைப்புகளை பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் விண்கலம் ஏழு பேலோடுகளை எடுத்துச் செல்கிறது.
இதில் இருக்கும் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 கருவிகள் அங்கே இருக்கும் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்யும்.
சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றிய ஆய்வு. குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல் பற்றிய ஆய்வு, அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனல் எரிப்பு பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.
சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும் நான்கு பேலோடுகளில் ஒன்று Visible Emission Line Coronagraph(VELC) ஆகும், இது கொரோனா/இமேஜிங் சோதனையை மேற்கொள்ளும். அதேபோல் இந்த விண்கலத்தில் புற ஊதா கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. சூரியனின் மேற்பரப்பைக் கண்காணிப்பதற்கான கருவி ஆகும் இது. இதை SUIT (சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்) என்று அழைக்கிறார்கள்.
அதேபோல் சூரியனின் கதிர்களில் பல்வேறு ஆய்வுகளை செய்ய Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS) மற்றும் High Energy L1 Orbiting X-ray Spectrometer(HEL1OS) போன்ற கருவிகளும் இந்த விண்கலத்தில் அனுப்பப்படுகின்றன. சூரியனில் ஏற்படும் சூரிய காற்றுகளை ஆய்வு செய்ய Aditya Solar wind Particle Experiment(ASPEX) மற்றும் Plasma Analyser Package For Aditya (PAPA) ஆகியவை பயன்படுத்தப்படும்.
எப்படி செல்லும்?: இந்த விண்கலத்தில் இருக்கும் liquid apogee motor (LAM) என்பதுதான் இதை விண்ணுக்கு சுமந்து செல்லும். அதாவது புவி வட்டப்பாதையில் பிஎஸ்எல்வி ஆதித்யாவை நிறுத்திய பின் அது பூமியை சுற்றி சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக வட்டப்பாதையை அதிகரிக்கும். இதில் வட்டப்பாதையை அதிகரிக்க liquid apogee motor (LAM) பயன்படுத்தப்படும்.
அப்படியே வட்டப்பாதையை அதிகரித்து எல் 1 பாயிண்ட் அருகே ஆதித்யா எல் 1 செல்லும். அங்கிருந்து மேலும் சில வட்டங்களை அடித்து liquid apogee motor (LAM) எல் 1 பாயிண்டில் சுற்ற தொடங்கும். இதற்கு பெரும்பாலும் 127 நாட்கள் ஆகும்.
சந்திரயான் 3: சமீபத்தில்தான் இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி ஆய்வு செய்து வருகிறது,
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications