2020லேயே பரவியது.. டெல்டாவின் "பங்காளி".. அச்சுறுத்தும் கப்பா வகை உருமாறிய கொரோனா.. எப்படிப்பட்டது?
சென்னை: இந்தியாவில் தற்போது பரவி வரும் கப்பா வகை கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட டெல்டா வகை கொரோனாவின் பண்புகளை கொண்டது. இரண்டும் கிட்டத்தட்ட அண்ணன் - தம்பி போன்றதாகும்.
இந்தியாவில் ஏற்கனவே டெல்டா வகை மற்றும் டெல்டா+ வகை கொரோனா வைரஸ்கள் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது கப்பா வகை கொரோனாவும் பரவி வருகிறது. இன்று உத்தர பிரதேசத்தில் இரண்டு கப்பா வகை கொரோனா கேஸ்கள் கண்டறியப்பட்டன.
109 ஜீனோம்களை சோதனை செய்ததில் 2 பேருக்கு கப்பா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 107 பேருக்கு டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் பரவ தொடங்கி இருக்கும் கப்பா வகை கொரோனா குறித்து மக்கள் கவலையடைய தொடங்கி உள்ளனர்.

கப்பா வகை
மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கப்பா வகை கொரோனா இப்போது அல்ல இதற்கு முன்பில் இருந்தே இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2020 அக்டோபர் மாதமே இந்தியாவில் கப்பா வகை கொரோனா கண்டறியப்பட்டது. B.1.617.1 வகை கொரோனாதான் கப்பா வகை என்று அழைக்கப்படும்.

B.1.617
B.1.617 வகை கொரோனா வகையில் இருந்து பிரிந்து B.1.617.1 எனப்படும் கப்பா வகை உருவானது. இதே குடும்பத்தில் இருந்து பிரிந்து உருவான B.1.617.2 வகை கொரோனாதான் டெல்டா வகை கொரோனா என்று அழைக்கப்படுகிறது. டெல்டா வகை கொரோனாவில் இரண்டு உருமாற்றம் ஏற்பட்டது போல இதில் இரட்டை உருமாற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

உருமாற்றம்
EE484Q மற்றும் L452R என்று இரண்டு வகையான புரோட்டின் உருமாற்றம் ஏற்பட்ட காரணத்தால் கப்பா வகை உருவானது. இதனால் டெல்டா வகை போல இதுவும் வலுவானது. அதேபோல் L452R வகை உருமாற்றம் அடைந்த கொரோனா பொதுவாக இம்யூனிட்டி எஸ்கேப் கொண்டது. ஏற்கனவே கொரோனா இம்யூனிட்டி இருக்கும் நபர்களை L452R வகை உருமாற்றம் கொண்ட கொரோனா தாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்து
இதனால் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் ஒருவேளை மீண்டும் கப்பா வகை கொரோனா மூலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கப்பா வகை 2020 அக்டோபரில் இருந்து பரவி வருகிறது. உலக சுகாதார மையம் இந்த கப்பா வகை கொரோனா கவலை தரும் வகையாக அறிவிக்கவில்லை.

கவலை
அதே சமயம் கவனிக்க வேண்டிய வகை கொரோனாவாக கப்பா வகையை அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை விவரத்தின்படி இந்தியாவில் செய்யப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சியின்படி இந்தியாவில் 3969 ஆல்பா, 1 காமா, 16238 டெல்டா மற்றும் கப்பா கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications