இட்லியில் ஆரம்பித்த சிக்கல்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் அந்த பக்கம் பாஜக, இந்த பக்கம் பாமக!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு இட்லி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை.. கிளாம்பாக்கம் உள்பட அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் என எல்லாமே கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன. தற்போது ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி, சென்னைக்குள் வராமல் நேராக கிளாம்பாக்கம் வந்து செல்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்போதிய அளவில் இரவில் பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், பெரும் சர்ச்சையானது.

இது ஒருபுறம் எனில் கிளாம்பாக்கத்தில் போதிய உணவகங்கள் இல்லை என்றும் ஏடிஎம்கள் போதிய அளவில் இல்லை என்றும், மலிவு விலை உணவகங்கள் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில், அவசர அவசரமாக திறக்கப்பட்ட 'கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்', சென்னை மாநகருக்கு வந்துச் செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.
கிளாம்பாகத்தில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பஸ் நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் மக்களின் பிரச்சினை ஓரளவுக்காவது குறையும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஒரு இட்லி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை. கிளாம்பாக்கம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பாஜக இப்படி என்றால்,பாமகவும் விமர்சித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று விமர்சித்தார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுப்பது நியாயமில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதிய வசதிகள் இல்லாமல், இணைப்புகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதை நேரடியாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக இதை பேசவில்லை.. இவ்வாறு கூறினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications