பாஜகவுக்கு நோ சொல்கிறதா தமாக.. 2 தொகுதிகள் தரும் கட்சியுடன் தான் கூட்டணியாம்.. யுவராஜா பரபர பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் தமாகா கட்சி சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சியுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை செய்து வருகிறது.

மறுபக்கம் அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. மெகா கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் தாங்கள் எந்த பக்கம் செல்கிறோம் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
பாஜக, அதிமுவுடன் இக்கட்சிகள் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் தமாகா கட்சி சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்று கூறியுள்ளார். தாமரை சின்னத்தில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் கூறிய நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா இவ்வாறு அறிவித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவுடன் தேமுதிக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இந்த பேட்டியும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications