கூட்டணிக்கு ஒரே கண்டிஷன் தான்.. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? அதிமுக மாஜி அமைச்சர் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணையலாம் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இணைவதற்கான ஒரு நிபந்தனை இதுதான் என்ற ரீதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.

பாஜக உடன் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என்றும், இதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமையை பாஜக மேலிடம் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் ஆனால், அதற்கு அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

Alliance with party that accepts Edappadi Palaniswami as chief ministerial candidate: Pollachi Jayaraman

கூட்டணியை முறித்துக் கொண்டாலும் பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதானால், அதிமுக நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் கப் சிப் என்றே உள்ளனர். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக கூறினாலும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இது அப்பட்டமான ஒரு அரசியல் நாடகம். லோக்சபா தேர்தலின் போது பாஜகவும் அதிமுகவும் மீண்டும் கூட்டணி அமைப்பார்கள்; அப்போது இணைந்தே தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் பேசியிருப்பதாவது:- அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இனி வரப்போகும் தேர்தலில் அமைக்கிற கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாக அமையும். எம் ஜி ஆர் எப்படி மக்கள் சக்தி படைத்த ஒரு மாபெரும் தலைவராக திகழ்ந்தாரோ..

அதேபோல் எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதா எப்படி மக்கள் சக்தி படைத்த தலைவராக திகழ்ந்தாரோ.. எம்ஜிஆர் 18 லட்சம் தொண்டர்களை வைத்திருந்தார். இதனை ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றினார்கள். அதே போல தான் எடப்பாடி பழனிசாமி தற்போது 2 கோடிக்கும் மேலான தொண்டர்களாக மாற்றியிருக்கிறார். எனவே இவர் தலைமையில் அமையும் கூட்டணியானது மாபெரும் வெற்றி பெறும்.

இனிமேல் வரப்போகும் எந்த தேர்தலிலும் தன் நிகர் அல்லாத மாபெரும் வெற்றி பெறும். மக்களோடு சாதாரணமாக பழகுபவர்.. கிளைச்செயலாளாரக இருந்து இந்தியா வரலாற்றிலேயே கட்சிக்கே தலைமை வகித்து கழக பொதுச்செயலாளராக உருவெடுத்திருக்கவரின் தலைமையில் இருக்கும் எங்களை சாதாரணமானவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. இரண்டே கால் கோடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும்.

கையாள் ஆகாத.. காவல்துறையை செயல்பட விடாமல் வைத்திருக்கிற.. கனிமவள கடத்தலுக்கு காரணம் ஆன திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு போகும். இதில் கையூட்டல் பெற்றவர்கள் எல்லாம் உள்ளே போவார்கள்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. கூட்டணியில் முரண்பாடு இருந்ததால் அதில் இருந்து நாங்கள் வெளியேறினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+