டிடிவியுடன் கூட்டணி.. வேல்முருகன் தடுமாற்றம்? சீமான் சொன்ன ரகசியம்! வசமா சிக்கிய ‘பங்கு’ ?
சென்னை: பண்ருட்டி வேல்முருகன் தன்னை திமுக கூட்டணிக்கு வாழ்த்தி அனுப்பி வைத்ததே சீமான் தான் என கூறியிருந்த நிலையில் அது குறித்த உண்மை என்ன என்பதைச் சீமான் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் திமுக அரசை விமர்சித்துப் பேசி இருந்தார். தனது தொகுதிக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படவே இல்லை என்று கூறினார்.

அதற்கு சபாநாயகர் அப்பாவு, "அப்படி பொதுவாக எதையுமே செய்யவில்லை என்று சொல்லக் கூடாது. அதை நான் அவை குறிப்பிலிருந்து நீக்கிவிடுவேன். என்ன செய்யவேண்டும் எனச் சொல்லுங்கள். அமைச்சர் பதிலளிப்பார்" என்றார். ஆனாலும், வேல்முருகன் திமுக அரசின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளைச் சபைக்கு வெளியே இருந்த ஊடகங்களைச் சந்தித்துப் பேசினார். அடுத்து பல ஊடகங்களில் திமுக ஆட்சியை விமர்சித்து பேட்டிகள் அளித்தார்.
வேல்முருகன் அளித்த பேட்டிகளில், கடலூர் மாவட்டம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கு உரிய நிவாரணம் அரசு அளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். சென்னை, தூத்துக்குடி வெள்ளத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அளித்த தமிழக அரசு கடலூர் மக்களுக்கு குடும்ப அட்டைக்கு 2 ஆயிரம் வழங்குவது நியாயமா? எங்களுக்கு மட்டும் ஏன் அநீதி? பிச்சையா போடுகிறார்கள் என்று கூறி இருந்தார்.
திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் நீங்கள் ஏன் அந்தக் கட்சியுடன் கூட்டணிக்குப் போனது ஏன் என கேள்வி வேல்முருகனிடம் முன்வைக்கப்பட்டது. அப்போது சீமான் சொல்லித்தான் திமுக கூட்டணிக்குப் போனேன் என்று ஒரு உண்மையை வெளியிட்டிருந்தார். வேல்முருகன் அளித்த பேட்டியில், "தனியாக நான் கட்சி தொடங்கிய போதே இந்தத் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற முடிவில்தான் உறுதியாக இருந்தேன்.

கடந்த 2016இல் நடந்த தேர்தலில் தனித்துத்தான் தேர்தலைச் சந்தித்தேன். அப்போது நான் போட்டியிட்ட போதும் எனக்கு 32 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. நான் வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் தேவையாக இருந்தது.
என் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகளை பாமக வைத்திருந்தது. ஆனால், அவர்களுடன் நான் சேர்ந்து போட்டியிடமுடியாது. அடுத்த வாய்ப்பு எங்கே என தேடும்போது என் முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று அதிமுக. அடுத்து திமுக. இவர்களுக்கு என் தொகுதியில் 20 வாக்குகள் உள்ளன. அதை என் பக்கம் திருப்பினால் சட்டசபைக்குள் நான் சென்று என் மக்களின் குரலாக ஒலிக்க முடியும். எனவே போனேன்.
இந்தக் கட்சிகளே வேண்டாம் தமிழர்களாக நாம் ஒன்றுபடுவோம் என முயற்சி எடுத்தேன். தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்றிணைத்தேன். அதை ஏற்று சீமான் என்னுடன் வரவில்லை. அவர் என்னை திமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட சொல்லி வாழ்த்தி அனுப்பியதே சீமான்தான்" என்று கூறி இருந்தார்.
திமுகவைக் கடுமையாக விமர்சிக்கும் சீமான் ஏன் வேல்முருகனை அந்தக் கட்சிக்கு கூட்டணிக்குப் போகச் சொன்னார் எனச் சந்தேகம் எழுந்த நிலையில் அது பற்றி இப்போது சீமான் விளக்கம் அளித்துள்ளார். சீமான் பேசுகையில்,"ஆரம்பத்தில் நான் வேல்முருகனை அழைத்தேன். அப்போது நாங்கள் பெரிய அளவில் வளரவில்லை. எனவே அவர் பாமகவைவிட்டு வெளியேறியதும் போய் சந்தித்து நாம் இணைந்து செயல்படுவோம் என்று சொல்லி அழைத்தேன். அவர் வரவில்லை. வேல்முருகனும் தனிக் கட்சி தொடங்கிவிட்டார். அதன்பின்பும் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம்.
கடந்த முறை டிடிவி தினகரனுடன் கூட்டணிக்குப் போகலாமா? என்று வேல்முருகன் கேட்டார். அவருக்கு எப்படி இருந்தாலும் எம்.எல்.ஏவாக இருக்கவேண்டும். அவருக்கு அப்போதுதான் பாதுகாப்பு இருக்கும். எனவே தினகரனுடன் போகவேண்டாம். எம்.எல்.ஏ ஆகவேண்டும் என உறுதியாக இருக்கும்போது திமுகவுடன் போய்விடுங்கள் என்று சொன்னேன். அவர் தினகரனுடன் போகப் போகிறேன் என்றார்.
அதைவிட திமுகவிடமே நீங்கள் போகலாம் என்று நான் சொன்னேன். இதைச் சொன்ன வேல்முருகன் தினகரனுடன் போகப்போகிறேன் என்று சொன்னதையும் சொல்லி இருக்க வேண்டுமா? இல்லையா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் தினகரன் கூட்டணிக்கு வேல்முருகன் சென்றிருந்தால் அவரது நிலை இன்றைக்கு என்ன ஆகியிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அதை மக்களே புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
-
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications