அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு! எதிர்பார்த்தது ஒன்று! கிடைத்தது ஒன்று!
சென்னை: அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இலாக்கா மாற்றங்களில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பவர்ஃபுல் இலாக்காவான நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் சாமிநாதன்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள், ஜூனியர்களுக்கு எல்லாம் முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததால் வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்செட் மனநிலையிலேயே காலத்தை கடத்தி வந்தார்.
இப்போது நடைபெற்ற இலாக்கா மாற்றத்தின் போதாவது சீனியர் என்ற அடிப்படையில் தனக்கு பால்வளத்துறையோ அல்லது வேறு ஏதேனும் முக்கியத் துறையோ ஒதுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் எதிர்பார்த்தார்.
ஆனால் அது போல் அல்லாமல் கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் தொழில்துறையுடன் சேர்ந்து இருந்து வந்தது.
இப்போது தங்கம் தென்னரசு வசம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை கொடுக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக தொல்லியல் துறை மட்டும் அவர் கவனிக்கவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications