மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு! ரசிகை பலியானது தெரிந்தும் 3 மணி நேரம் புஷ்பா பார்த்த அல்லு! ஷாக் வீடியோ
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகை பலியானது தெரிந்தும் கூட.. தொடர்ந்து விடாமல் 3 மணி நேரம் படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்த்தது வீடியோ மூலம் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அல்லு அர்ஜூன் மீது ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல், அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார். அதோடு தெலங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. தான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது, என்று கூறி உள்ளார்.
அல்லு அர்ஜுன் செய்த தவறு:
ஒரு பெரிய சினிமாவிற்கு.. அதிலும் ரசிக வெறி கொண்ட ஒரு சினிமா உலகில்.. படம் ரிலீஸ் ஆகும் நாளில் பிரிமியர் ஷோவை பார்க்க வெளிப்படையாக செல்வது என்பது எவ்வளவு தவறான விஷயம். ஆனால் அந்த இங்கீதம் கூட இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சையானது.
அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார்.
இதற்காக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்ய ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் மோதல்
பெண் உயிரிழந்தது தெரிந்தும், புஷ்பா 2 படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் புறப்பட்டதாகவும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் குற்றச்சாட்டு வைத்தார்.
அதாவது அவர் படம் முடியும் வரை அங்கேயே இருந்தார். போலீஸ் உத்தரவை மீறி கார் சன் ரூப் மேலே ஏறி சென்று வணக்கம் வைத்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை மறுத்த அல்லு அர்ஜுன் நான் அப்படிப்பட்டவன் இல்லை.. என்னை நம்புங்கள். அது எதிர்பாராத விதமாக நடந்த துயரச் சம்பவம். அதற்கு யாரையும் குறைகூற முடியாது. நாடே என் படத்தை கொண்டாடியபோது நான் சோகத்தில் இருந்தேன்., என்று விளக்கம் அளித்தார்.
உண்மை என்ன?:
நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகை பலியானது தெரிந்தும் கூட.. தொடர்ந்து விடாமல் 3 மணி நேரம் படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்த்தது வீடியோ மூலம் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
பெண் இறந்துவிட்டார் என்று கூறியும் 3 மணி நேரம் படத்தை முடித்து விட்டு சென்ற அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவரிடம் தியேட்டரில் இருக்கும் போதே ரசிகை பலியானது பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடைசியில் பாடல் முடியும் வரை அவர் இருந்துவிட்டு அதன்பின்பே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications