Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகப்போர் 3.. கொத்து கொத்தாக போகும் உயிர்கள்.. சொன்னபடி நடக்கும் நாஸ்ட்ராடாமஸ் 2025 கணிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025ம் ஆண்டில் என்ன நடக்கும் என்று நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட கணிப்புகள் பல அப்படியே நடக்க தொடங்கி உள்ளன.

உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த வல்லுனர்களில், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்ட்ராடாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.

nostradamus

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.

2025ல் என்ன நடக்கும்: இந்த நிலையில்தான் தற்போது நடந்து வரும் 2025ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார் என்றுள்ளார்.

"கொடூரமான போர்களால்" சூழப்பட்டு "எதிரிகளை விட மோசமான துரோகங்களால்" சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரித்து உள்ளார். "பழங்கால பிளேக்" வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும். இங்கிலாந்துக்கு புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது.. அதற்கு காரணமாக இந்த பிளேக் அமைந்துவிடும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஏற்கனவே அவரது COVID-19 தொற்றுநோய் கணிப்பு உண்மையாகிவிட்டதால்.. இந்த முறையும் வேறு ஒரு பெருந்தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்தது.

சொன்னபடி நடக்கிறது?

"கொடூரமான போர்களால்" சூழப்பட்டு "எதிரிகளை விட மோசமான துரோகங்களால்" சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று அவர் எச்சரித்தபடியே - போர்கள் நடக்கின்றன.

ஈரான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் உச்சம் அடைந்து உள்ளது. அதேபோல் இந்தியா - பாகிஸ்தானும் சில நாட்களுக்கு முன் போர் செய்தன. ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் 3ம் உலகப்போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் மட்டுமன்றி உலக அரசியலில் தற்போது பல்வேறு விதமான ராணுவ மோதல்கள் நடந்து வருகின்றன.

உலக அளவில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது.

"பழங்கால பிளேக்" வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும்- என்று கூறி இருந்தார். அதன்படியே கொரோனாவின் புதிய அலை ஏற்பட்டு உள்ளது. பல நாடுகளில் தீவிரமாகவும் பரவி வருகிறது.

போப் மரணம் கணிப்பு

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில், போப் என்று அழைக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88. அவரின் மரணம் குறித்து நாஸ்ட்ராடாமஸ் முன்கூட்டியே துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது.

போப் பிரான்சிஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவர் ஆவார். நாஸ்டர்டாமஸ் எழுதிய 'லெஸ் ப்ரோபடீஸ்' என்ற புத்தகத்தில் இது தொடர்பான கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் போப் பிரான்சிஸின் மரணம் பற்றிய தீர்க்கதரிசனம் இருந்ததாக கூறப்படுகிறது. . நாஸ்ட்ராடாமஸ் தனது புத்தகத்தில் ஒரு பத்தியில், "போப் ஆண்டவர் முதிய வயதில் மரணம் எய்துவார் (பிரான்சிஸ் காலத்தை குறிப்பிட்டு கணிப்பு).. அந்த மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம் ... நல்ல இளம் வயதுடைய இன்னொரு ரோமன் நாட்டை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பின் அவர் பற்றிய நிறைய கேள்விகள் எழும். அவர் வலிமையானவரா என்றெல்லாம் கேள்விகள் எழும். ஆனால் அவர் நீண்ட காலம் போப்பாக இருப்பார். அவர் மக்களை பல இன்னல்களில் இருந்து காப்பார் என்று கண்டித்துள்ளார்.

விபத்துகள்

அதேபோல் பல போக்குவரத்து விபத்துகள், கொடூர சம்பவங்கள் நடக்கும் என்றும் இவர் கணித்த நிலையில் அகமதாபாத் விமான விபத்து, ஆர்சிபி நெருக்கடி மூலம் ஏற்பட்ட விபத்து என்று அடுத்தடுத்து பல ஷாக் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+