சிலிண்டர் புக் பண்ண போறீங்களா.. வீட்டுக்கே வரப்போகும் சர்ப்ரைஸ்.. ஐஓசி மெகா பிளான்
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டருடன் இனி நீங்கள் மளிகை சாமான்களையும் உங்கள் கேஸ் ஏஜென்சிகளிடம் வாங்க முடியும். இதன் மூலம் வீடுகளுக்கே மளிகை பொருட்கள் விநியோகம் வரப்போகுது.. இந்த திட்டம் பற்றி பார்ப்போம்..
சமையல் கேஸ் சிலிண்டரை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான், இண்டேன் போன்ற நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் பொதுமக்களுககு வீடுகளுக்கு 14.50 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ 47.50 கிலோ 425 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெற 2 கிலோ 5 கிலோ சிலிண்டர்களையும் விற்பனை செய்கிறது.

இந்த 2 கிலோ அல்லது ஐந்து கிலோ சிலிண்டர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை. ஆனால் 14 கிலோ சிலிண்டர் வாங்க வீடு வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம், மின் கட்டண ரசீது போன்ற ஏதோவது வீட்டின் ஆவணங்கள் கண்டிப்பாக தேவை. சிலிண்டர்கள் போனில் முன்பதிவு செய்தால் அடுத்த சில நாட்களில் வீடுகளுக்கு வந்து விநியோகிக்கப்படுகிறது. இதுவரை சமையல் கேஸ் விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மற்றும் அதற்கு தேவையான ஸ்பேர்களை மட்டுமே விற்கின்றன.
இந்நிலைலையில் கேஸ் சிலிண்டருடன் இனி நீங்கள் மளிகை சாமான்களையும் உங்கள் கேஸ் ஏஜென்சிகளிடம் வாங்க முடியும். இதன் மூலம் வீடுகளுக்கே மளிகை பொருட்கள் விநியோகம் வரப்போகிறது. பொதுத் துறையை சேர்ந்த ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் ஐஒசிக்கு 925 ஏஜன்சிகள் உள்ளன. 1.48 கோடி வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் தமிழ்நாட்டில் ஐஓசி வினியோகம் செய்கிறது. ஒவ்வொரு ஏஜன்சிக்கும் சராசரியாக 15,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
தற்போது ஐஒசி நிறுவனம் சமையல் கேஸ் விற்பனையை தாண்டி, வணிகம் வாயிலாக வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் குளிர்பானம் பிஸ்கட் போன்ற பொருட்களையும் விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது.

தற்போதைய நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சிகள் ஒரு சிலிண்டருக்கு 60 ரூபாய் கமிஷன் பெற்று வருகின்றன. அவர்கள் ஒரு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போது,கையோடு மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று இந்த திட்டத்தை ஐஒசி முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சென்னையில் ஒரு ஏஜென்சி, காஞ்சிபுரம் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஒரு ஏஜென்சி என மொத்தம் மூன்று ஏஜன்சிகளில் மளிகை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை ஆரம்பம் ஆகி உள்ளது. படிப்படியாக மற்ற ஏஜன்சிகளிலும் விரிவுபடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வணிகத்தை ஏஜன்சிகள் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் விருப்பப்படுபவர்கள் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்களையும் பொதுமக்கள் பெற முடியும். அதேநேரம் விலைகுறைவாக இருந்தால் வரவேற்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று மக்கள் சொல்கிறார்கள்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications