''கட்சி பெயரை வைத்து சம்பாதிக்கிறார் செல்வப்பெருந்தகை''! சத்தியமூர்த்தி பவனில் ரஞ்சன் குமார் ஆவேசம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி, பவனில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமாருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்ககின் 116வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் செய்திருந்தார்.

இந்நிலையில் விழா அழைப்பிதழில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பெயரை ஏன் போடவில்லை என்றும் அவரை ஏன் அழைக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய அவரது ஆதரவாளர்கள் கே.எஸ்.அழகிரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து விழா ஏற்பாட்டாளரான ரஞ்சன் குமார், கட்சி பெயரை வைத்து சம்பாதிக்கிறார் செல்வப்பெருந்தகை என்றும் தாமே அழைத்தும் அவர் வரவில்லை எனவும் பதிலடி கொடுத்தார். இதனால் வார்த்தைப் போர் முற்றி சத்தியமூர்த்தி பவன் ரணகளமானது. கோஷ்டிப் பூசலில் அடிதடி நிகழ்ந்துவிடுமோ என அஞ்சிய அழகிரி வேகமாக தனது அறைக்கு சென்றுவிட்டார்.
அங்கே இதாயத்துல்லா உள்ளிட்டோர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட கே.எஸ்.அழகிரி, சத்தியமூர்த்தி பவனிலிருந்து புறப்பட்டுச் சென்றார். நகமும் சதையும் போல் தமிழக காங்கிரசும், கோஷ்டிப் பூசலும் பிரிக்க முடியாத இடத்தில் இருக்கிறது.
செல்வப்பெருந்தகை தரப்புக்கும் , ரஞ்சன் குமாருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செல்வப்பெருந்தகையை புறக்கணித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்களில் சிலர் பேட்டி கொடுக்க முயன்றதும் அவர்களுக்குள்ளேயே சிலர் பேட்டியெல்லாம் வேண்டாம் என தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications