Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு பொறாமையா? விஜய் மீதா? நான் அவர் ரசிகன் தெரியுமா? : போஸ் வெங்கட் பல்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பொறாமையும் கிடையாது என்று நடிகரும் திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகம் மாநாடு பலரையும் சூடேற்றி இருக்கிறது. விஜய் கட்சி தொடங்கிய போது அதை வரவேற்றுப் பேசிய திருமாவளவன், இப்போது மிகக் கடுமையாக எதிர்க்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் அரசியல் ரீதியாக எதிர்ப்புகளைச் சந்தித்த போது சீமான் தொடர்ந்து அவரை ஆதரித்து வந்தார். விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடன் மிகப்பெரிய ஆதரவை அளித்தார் சீமான்.

vijay bose venkat

ஆனால், பெரியார், திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவைதான் தவெகவின் கொள்கைகள் என விஜய் பேசிய உடன், 'விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று இல்லை. சாம்பாரும் கருவாட்டுச் சாம்பாரும் ஒன்று இல்லை' என்று விமர்சித்திருந்தார். ஆக, இப்போதைக்கு அதிமுக மட்டுமே விஜய்யின் பக்கம் நிற்கிறது. அதிலும் கூட பத்திரிகையாளர்களை சசிகலா, ஏற்கெனவே திராவிடக் கட்சிகள் சமூகநீதிக்காக நிறையச் செய்துள்ளன. 69% இடஒதுக்கீடு ஜெயலலிதாவால் கிடைத்தது. கட்சி தொடங்குவதற்கு முன்பு எம்.ஜி.ஆர், சுமார் 10 ஆயிரம் கூட்டங்கள் பேசி இருக்கிறார். ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்கிறார் என்று விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.

விஜய் எதிர்ப்பில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர் நடிகர் போஸ் வெங்கட். அவர் போட்ட ட்வீட்டில், "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்" என்று கூறியிருந்தது பெரிய வைரலானது.

இந்நிலையில் தனது ட்வீட் பற்றியும் விஜய் அரசியல் பிரவேசம் பற்றியும் போஸ் வெங்கட் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "விஜய்யைப் பிடிக்கவில்லை என்று நான் எங்கேயும் சொல்லவே இல்லை. எனக்குப் பிடித்த நடிகர் விஜய்தான். அவரது எந்தப் படத்தின் கதையை வேண்டுமானாலும் கேளுங்கள் அப்படியே சொல்லுவேன். இன்னும் சொல்லப்போனால் விஜய் போஸ்டர் பக்கத்தில் நின்று கூட போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். எங்கேயும் விஜய் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லவே இல்லை. ஆனால், விஜய்க்கு நான் இப்போது ரசிகர் மட்டும் இல்லை. அவர் படத்தில் நடிப்பதைவிட்டு பொதுவெளிக்கு வந்துவிட்டார். அரசியல் வந்த பிறகு பலரும் தங்களின் கருத்தைச் சொல்லவே செய்வார்கள். அதைத் தடுக்க முடியாது.

அரசியல் கட்சி தொடங்கியவுடன் நான் என் இன்ஸ்டாகிராமில் வெல்கம் என்றுதான் போட்டேன். அவரை வரவேற்று எழுதினேன். பலரும் அதைச் செய்தியாகப் போட்டார்கள். இப்போது நானேதான் இந்தக் கருத்தையும் சொல்கிறேன். அவர் கட்சி ஆரம்பித்தார். நான் கொள்கை என்ன என்று கேட்கிறேன். நீட் தேர்வு எதிர்ப்பு என்கிறார். அண்ணாதுரையும் பெரியாரும் தலைவர்கள் என்கிறார். சாவர்க்கரை பிடிக்குமா? பிடிக்காதா? என்றால், நிச்சயம் பிடிக்காது என்கிறார். பாஜகவை ஆதரிப்பீர்களா? என்றால், வாய்ப்பே இல்லை என்கிறார். சனாதனத்தை ஆதரிக்கிறீர்களா? என்றால், இல்லவே இல்லை என்கிறார். இதை அனைத்தையும் தான் திமுக செய்து வருகிறதே? அப்புறம் ஏன் விஜய் வருகிறார்?

அவரிடம் ஒரு தனித்துவமான கொள்கை இருக்கவேண்டுமா? வேண்டாமா? ரசிகர்கள் எல்லோரும் ஓட்டுப் போடுங்கள் என்கிறார். நானும் அவர் ரசிகர்தான். ஆனால், ஓட்டுப் போடுவேனா? என்னைப் போல பலர் ஓட்டுப் போடாமல்விட இருப்பார்கள். உடனே முதல்வராகிவிட முடியுமா? வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். பின் அவர்கள் பதவியை தரும்போது ஏற்க வேண்டும். நான் ஏதோ விஜய் முதல்வராக வரவே கூடாது என்றா சொன்னேன்? தாராளமாக வாங்க. தேர்தலில் நில்லுங்கள். வெற்றிபெறுங்கள். முதல்வராகுங்கள். ஆனால், ஒரு மாற்று என்று சொல்லக்கூடிய புதிய கொள்கை வேண்டாமா?

திமுக கூட்டணி பலமாக உள்ளது. ஆகவே, விஜய்யைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. நான் திமுக கொள்கை பிடித்துள்ளது. அதனால் அந்தக் கட்சியில் இருக்கிறேன். விஜய் பக்கம் யார் போவார்கள்? சந்திரபாபு நாயுடு மாதிரி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் போவார்கள். அவர் பவன் கல்யாண், பாஜக என எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். திமுகவுக்கு அப்படி அவசியமும் இல்லை. பாஜக எதிர்ப்பு என்பதிலும் திராவிடக் கொள்கை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

எனவே விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு ஒரு பொறாமையும் இல்லை. அவர் சிறப்பாக மாநாடு நடத்தினார். சொந்தப் பணத்தைச் செலவு செய்திருக்கிறார். இந்த மாநாட்டுக்கு 20 கோடி செலவு செய்ததாகச் சொல்கிறார்கள். யார் சொந்த பணத்தைப் போடுவார்கள்? ஆகவே, அவர் மீது எனக்கு ஒரு பொறாமையும் கிடையாது. எனக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைச் சொல்ல வேண்டும். பொது மக்களின் ஒருவனாக அதைக் கேட்கிறேன்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது பண்ருட்டி ராமச்சந்திரன் போல பலர் உடன் இருந்தனர். விஜய்யுடன் இருப்பவர்கள் யார் என்றே தெரியவில்லை? அவருடன் இருப்பவர்கள் ஏதோ ரசிகர் மன்ற நிர்வாகிபோல இருக்கிறார்கள். அது ஒரு கட்சி போல் தெரியவில்லை. ஒரு ரசிகர் மன்றம் விழா எடுத்தால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது மாநாடு. அவருடன் பலமான தலைவர்கள் இல்லை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+