அமர் பிரசாத் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.. அம்பை கோர்ட்டில் ஆஜரான நிலையில் செங்கல்பட்டு கோர்ட் அதிரடி!
சென்னை: அமர் பிரசாத் ரெட்டிட்யின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ஆம் தேதியான நாளைக்கு ஒத்தி வைத்து செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்தக் கொடிகம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அப்போது ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். மேலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தென்காசி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அண்ணாமலையின் பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு கொட்டும் மழைக்கு இடையே அமர் பிரசாத் ரெட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமர் பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ஆம் தேதியான நாளைக்கு ஒத்தி வைத்து செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்து வரும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்த வழக்குகளில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சென்னையை ஒட்டி 3 வழக்குகள் இருந்த நிலையில் இப்போது தென்காசி மாவட்டத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது விசாரணை நடைபெறுவதால், அமர் பிரசாத் ரெட்டி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.
-
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications