தமிழக விவசாயிகளுக்கு செம சான்ஸ்.. டிராக்டர் முதல் டிரோன் வரை.. கூட்டுறவு துறை வாரிதரும் சலுகை.. வாவ்
சென்னை: விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சர்ப்ரைஸ் சலுகைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் கூட்டுறவு நிறுவனங்களின் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அத்துடன், அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி, பலன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

"தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 4,456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் வழங்குதல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாய நிலம்: கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் பல்வேறு சேவைகளை வழங்கும் சங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, விவசாய நிலத்தை உழுதல், விதைப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடை உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் வேளாண் தொழிலாளர்கள் குறைந்துவிட்ட நிலையில், விரைவாக, குறித்த நேரத்திலும் விவசாய பணிகள் மேற்கொள்ள, 2,938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. இதுதவிர வேளாண் இயந்திரங்களை நியாயமான வாடகையில் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க'Coop e-வாடகை' என்ற சேவை கூட்டுறவுத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
தானியங்கிகள்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோவேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உள்ளன.
விவசாயிகள் தங்களின் தேவைக்கு பயன்படும் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை 'உழவர் செயலி' மூலம் தங்கள் வட்டாரத்தில் இருக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை உள்ளிட்ட விவரங்களைப் பெற்று, முன்பதிவு தேதி, நேரம், நிலத்தின் பரப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு: இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கைபேசிக்கு, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். முன்பதிவு செய்த, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம்.
மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் 'Coop e-வாடகை' சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம். இவற்றை குறித்த நேரத்தில் விரைவாகவும் நியாயமான வாடகையிலும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications