விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள்.. சரிசமமாய் உயில்.. டெலிகிராம் CEO தந்த புது ஆபர்.. ரியல் அப்பா
சென்னை: பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடிக்கடி ஏதாவது ஆச்சரியமான தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் பாவெல், மீண்டும் ஒரு அறிவிப்பைதை ற்போது வெளியிட்டு, உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டெலிகிராம் செயலியின் நிறுவனர்தான் பாவெல் துரோவ்.. ரஷ்யாவில் பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே கணினி விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.

டெலிகிராம் - புதிய செயலி
முதலில் அவர் VK என்ற சோஷியல் மீடியாவை உருவாக்கினார். அது ரஷ்யாவில் ஃபேஸ்புக் மாதிரி அன்று பிரபலமானது. ஆனால் அரசு கேட்ட தகவல்களை பாவெல் கொடுக்க மறுத்ததால், அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
அதற்கு பிறகுதான், டெலிகிராம் என்ற செயலியை தொடங்கினார்.... இதை தொடங்கியதுமே அவர் அறிவித்த அதிரடி என்ன தெரியுமா? இந்த செயலி பாதுகாப்பாக இருக்கும், பயனர்களின் தகவல்கள் யாருக்கும் கொடுக்கப்படாது என்பதுதான். அதாவது அரசுகள் அழுத்தம் தந்தாலும்கூட, "பயனர்களின் தனியுரிமை முக்கியம்" என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்..
டெலிகிராம் வசதிகள்
இன்று டெலிகிராம் உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறதென்றால், டெலிகிராம் மூலம் மக்கள் தங்கள் செய்திகளை பயமில்லாமல் அனுப்ப முடிகிறதென்றால், போட்டோ, மெசேஜ், வீடியோ எல்லாம் மற்றவர்கள் எளிதில் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பு வைத்திருக்க முடிகிறதென்றால், சாதாரண மக்களும் டெலிகிராமை பயன்படுத்த முடிகிறதென்றால்
அதற்கு காரணம் இந்த பாவெல் துரோவ் மட்டுமே..
சொத்து மதிப்பு
ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து நடத்தி வருகிறார் இந்த சிஇஓ.. அதுமட்டுமல்ல, பணம் கொடுத்து வாங்க வேண்டிய பல வசதிகளை டெலிகிராமில் இலவசமாக வைத்துள்ளார்.. ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.. தற்போது 41 வயதாகும் இவரது சொத்து மதிப்பு, 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள்..
இன்றுவரை எளிய வாழ்க்கையை பாவெல் துரோவ் வாழ்ந்து வருகிறார்.. நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்காமல், பல நாடுகளுக்கு சென்று வாழ்கிறார். பணம், அதிகாரம் விட சுதந்திரம் முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளார்.. என்றும் இளமையாக இருக்க அவர் எடுத்துக்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளுக்கு பாவெல் பிரபலமானவர். துரோவுக்கு தற்போது 3 மனைவிகள், 6 குழந்தைகள் உள்ளனர்..
விந்தணு தானம் - 100 குழந்தைகள்
விந்தணு தானம் செய்ததன் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக சமீபத்தில் பாவெல் கூறியிருந்தார்.. இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன்னுடைய சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்றும் துரோவ் அதிரடியாக அறிவித்திருந்தார்..
இதுகுறித்து துரோவ் சொன்னபோது, "அனைத்து குழந்தைகளும் எனக்கு சமம், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை., அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் என்னுடைய சொத்தில் சம பங்கு இருக்கும்..
குழந்தைகள் பட்டறிவு பெறவேண்டும். அதனால்தான் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொத்து குழந்தைகளுக்கு செல்லும்.. அதாவது அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
உயில் - புதிய அறிவிப்பு
இந்நிலையில், குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு ஒன்றையும் அவர் நேற்று வெளியிட்டுள்ளார். அதில், தன் விந்தணுவை பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றால், முழு மருத்துவ செலவை ஏற்பதுடன், சொத்திலும் பங்கு தருகிறேன், தன்னுடைய விந்தணுவை பயன்படுத்தி, குழந்தை பெறும், 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்..
உலக அளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இந்த தானத்தை நான் துவங்கி இருக்கிறேன்" என்று துரோவ் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications