அரசு ஊழியர்களுக்கு குஷி.. ஏறியது சம்பளம்.. தமிழகத்தில் ஸ்டாலின் சர்ப்ரைஸ்? முதல் அடியை வைத்த ராமதாஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை கிளம்பி உள்ளது. இதற்கான முதல் அதிரடியை கிளப்பியிருப்பவர் மூத்த தலைவரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ்.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏ எனும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வருடத்துக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படியானது, அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்.
அதிரடி அறிவிப்பு: அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.. இதன்மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி என்பது உறுதியாகி உள்ள நிலையில், ஜனவரி மாதம் முன்தேதியிட்டு வழங்கப்பட இந்த அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது..
ஏற்கனவே மத்திய அரசு பணியாளர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 46 சதவீதமாக உள்ள நிலையில், தற்போது இந்த 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக, அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தை எட்டியிருக்கிறது..
ஓய்வூதியதாரர்கள்: சுமார் 49.18 லட்சம் ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.. இப்போதைக்கு 4 சதவீத டிஏ உயர்வு மூலம் வருடத்துக்கு ரூ.12,868.72 கோடி செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு இப்படி ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் இதுபோல 4% அகவிலைப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு: இதுகுறித்து, ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க தில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தமிழக அரசு அறிவித்தது.
அகவிலைப்படி: அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தி வந்தது. இப்போதும் அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டு விட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக , அமைச்சரவையைக் கூட்டி 4% அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
கோரிக்கை : இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications