ரூ.3 லட்சம் தரும் சூப்பர் திட்டம்.. யாருக்கெல்லாம் வங்கி லோன் கிடைக்கும் தெரியுமா? மத்திய அரசு செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் நலனில் முழு அக்கறையை செலுத்திவரும் மத்திய அரசு, ஏழை பெண்களின் வியாபாரத்திலும் உதவி புரிந்து வருகிறது.. அந்தவகையில், கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் கடனுதவி திட்டம்தான் "பணியாளர் திட்டம்"

நம்முடைய நாட்டில் ஆண்களுக்கு சமமாக பெண்களும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், அனைத்து துறைகளிலும் பெண்களும் முன்னேற வேண்டும் என்பதில் மத்திய அரசு பெருத்த அக்கறையை செலுத்தி வருகிறது. முக்கியமாக சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது.

woman Central Government

நிதியுதவி: போதுமான நிதிவசதி இல்லாத காரணத்தினால், பல பெண்களால் சுயமாக தொழில் தொடங்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம். இதில், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

இதுபோலவே, பெண்களின் ஆதரவை பெற்ற திட்டம் "பணியாளர் திட்டம்" ஆகும்... மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகமானது, பெண் வியாபாரிகளுக்காகவே இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஏழை பெண் வியாபாரிகளும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வியாபாரத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு பணம் வழங்குகிறது.. இந்த பணத்தை எப்படி பெறுவது தெரியுமா?

ஏழை பெண்கள்: ஏழை பெண்கள் என்றாலும், கிராமங்களில் உள்ள பெண்களுக்கே மத்திய அரசு பணம் வழங்குவதில் முன்னுரிமை தந்து வருகிறது... அதாவது வட்டியில்லா கடன் என்று இதனை சொல்லலாம். எனவே, மத்திய அரசு தந்து உதவும் பணத்தை, வியாபாரத்திற்கு பயன்படுத்திவிட்டு, மறுபடியும் இந்த பணத்தை மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கே திரும்ப செலுத்திவிட வேண்டும்... அந்தவகையில், ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடனை வியாபாரம் செய்யும் ஏழை பெண்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கடன்தொகையை பிணை இல்லாமலேயே பெற்றுக் கொள்ளலாம். அதேபோல இந்த கடனை வழங்குவதற்கு வங்கிகளும் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

தகுதிகள்: இந்த திட்டத்தில் இணைய என்னென்ன தகுதிகள் தேவை தெரியுமா? எந்தவொரு வியாபாரத்தை பெண்கள் செய்தாலும் கடனுதவி உண்டு. ஆனால், இந்த கடன் பெற விரும்பும் பெண்கள், ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய கடனை உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஒற்றை பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கு குடும்ப வருமான வரம்பு இல்லை. இந்தக் கடன் வழங்கும் போது SC/ST பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்ணின் வயது 18 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

ஆவணங்கள்: இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற வேண்டுமானால் ஊழியரின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்று, வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் போன்றவை தேவைப்படும்.

இந்த ஆவணங்களுடன் உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கெனவே தனியா விண்ணப்ப படிவம் உள்ளது.. அதை பிழையின்றி நிரப்பி, ஆவணங்களை தர வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து வங்கியில் கடன் தருவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+