Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துருக்கி நிலநடுக்கம்.. மீட்பு பணியில் சென்னை ட்ரோன்கள்..தோனிக்கு நெருக்கமான நிறுவனம் உதவி! சூப்பர்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி 21 ஆயிரத்தை தொட்டுள்ள நிலையில் சென்னையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டி உள்ளது. இன்னும் ஏராளமானவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனி உள்ள நிலையில் அங்கு தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் துருக்கி மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி காசியான்டெப் நகர் உள்ளது. இந்த நகரம் துருக்கி-சிரியா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி அதிகாலையில் காசியான்டெப் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இந்த நிலநடுக்கம் துருக்கியின் காசியானடெப் உள்பட 10 நகரங்களிலும், எல்லையோர சிரியாவின் நகரங்களிலும் உணரப்பட்டதோடு, ஏராளமான கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. வீட்டில் தூங்கி கொண்டிருந்த பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

21 ஆயிரத்தை தொட்ட உயிர் பலி

21 ஆயிரத்தை தொட்ட உயிர் பலி

அதன்பிறகு அன்றைய தினம் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் துருக்கி, சிரியா ஆகியவை அதிக பாதிப்பை சந்தித்தன. சிரியாவை விட துருக்கி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இன்று 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் ‛ஆபரேஷன் தோஸ்த்'

இந்தியாவின் ‛ஆபரேஷன் தோஸ்த்'

இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகள் மேற்கொள்ள இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகள் உதவி செய்து வருகின்றனர். மீட்பு பணியை மேற்கொள்வதோடு, மருந்து பொருட்கள், உணவுகள் வழங்கி வருகின்றனர். இந்தியா சார்பில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் 250 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள், மோப்பநாய்கள், தன்னார்வல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு இந்தியா 135 டன் எடையுள்ள சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நடமாடு மருத்துவமனைகளை திறந்துள்ள இந்தியா பொதுமக்களுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

சென்னை நிறுவனத்தின் ட்ரோன்கள்

சென்னை நிறுவனத்தின் ட்ரோன்கள்

இந்நிலையில் தான் துருக்கி மீட்பு பணியில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ள தகவல் வெளியாகி உள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சென்னையை தலைமையிடமாக கொண்ட கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் தான் இந்த மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. இந்தியா சார்பில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த படை சார்பில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் ட்ரோன்கள் கோரப்பட்டுள்ளது.

2 ட்ரோன்கள் அனுப்பி வைப்பு

2 ட்ரோன்கள் அனுப்பி வைப்பு

இதுபற்றி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், "துருக்கியில் மீட்பு பணிக்காக கருடா ஏரோஸ்பேஸ் சார்பில் ட்ரோன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது வரை 2 ட்ரோன்களை அனுப்பி உள்ளோம்'' என்றார். துருக்கியில் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுப்பிடித்து மீட்க நவீன கேமராவுடன் இருக்கும் ‛ட்ரோனி' வகை ட்ரோனையும், அவசர தேவைகளுக்கான மருந்துகள், உணவு உள்பட துயர்துடைக்கும் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் கிசான் ட்ரோன்களையும் அனுப்ப உள்ளது.

தொடர்ந்து உதவும் நிறுவனம்

தொடர்ந்து உதவும் நிறுவனம்

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் மீட்பு பணி மற்றும் மருந்து பொருட்களை ஏற்றி செல்லும் பணியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பனிப்பாறை சரிந்ததில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. மலையேற்ற வீரரை காப்பற்றவும், அதன்பிறகு ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், கொரோனா பரவலின்போது தடுப்பூசி மற்றும் மருந்துகளை சுமந்து செல்லவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் ஒயிட் நைட் ட்ரோன்கள் 2021ல் பெங்களூரு மருத்துவமனைகளில் இருந்து இஸ்ரோவிற்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்க பயன்படுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+