சென்னையில் போலி பட்டா, போலி பத்திரம்.. அம்பத்தூரில் 2 கோடி ரூபாய் நிலம் காலி.. இப்படியும் நடக்குது
சென்னை: சென்னை அம்பத்தூரில் போலி ஆவணம், போலி பட்டா மூலம் ஆள் மாறாட்டம் செய்து 2கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து ஏமாற்றி வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்கள். நிலத்தை வைத்திருந்தவரும் சரி, அதை வாங்கியவரும் சரி, இப்போது சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள்.. ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்து நிலத்தை அபகரிப்பது, போலியாக வாரிசு சான்றிதழ் வாங்கி நிலத்தில் வில்லங்கம் செய்வதும் ஆங்காங்கே நடக்கிறது. மக்கள் கவனமாக இல்லாவிட்டால் பெரிய சிக்கலை சந்திப்பார்கள்.
தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் ஒரு ஊர் என்றால் அது சென்னை தான். சென்னையில் வீடு வாங்குவது இடம் வாங்குவது, கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. ஆனால் சென்னையில் வாங்கிவிட முடியாது. செ ன்னையின் புறநகரில் கூட வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது.

இதனால் பலர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பட்டா வாங்க முயற்சிக்கிறார்கள். சிலர் அரசு நிலங்களை ஏமாற்றி மக்களுக்கு விற்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் பலர் குளம், குட்டைகளில், நீர் வழிப்பாதைகளில், மேய்ச்சல் புறம்போக்கில் , பூமி தானா நிலத்தில், அனாதீன நிலத்தில் வீடு வாங்கி அவஸ்தை படுகிறார்கள்.
சென்னையில் அம்பத்தூர் முதல் பட்டாபிராம் வரையிலும், போரூர் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் முதல் மீஞ்சூர் வரையிலும், தாம்பரம் முதல் ஒரக்கடம் வரையிலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், கிளாம்பாக்கம் முதல் கேளம்பாக்கம் வரையிலும் ரியல் எஸ்டேட் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதியில் சிலர் போலி ஆவணங்கள், போலி பட்டா மூலம் மக்களை ஏமாற்றி நிலத்தை ஆள்மாறாட்டம் செய்வது ஆங்காங்கே நடக்கிறது. அப்படித்தான் 2 கோடி நிலத்தை ஒருவர் ஏமாந்துள்ளார்.
சென்னை மாதவரம் அடுத்த எருக்கஞ்சேரி ஜி.என்.டி. சாலையில் வசிக்கும் 52 வயதாகும் சிவானந்தம் விறகு கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறுகையில், "சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள எங்களுக்கு சொந்தமான 3410 சதுரஅடி கொண்ட சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் வேறு சிலருக்கு அந்த நிலத்தை விற்று மோசடி செய்து விட்டனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறி இருந்தார். இதுபற்றி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து போலியான பட்டா மற்றும் ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூர் அடுத்த பானு நகர், புதூர், செங்குன்றம் சாலையில் வசிக்கும் அசோக்குமார் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications