இந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்!
இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

அதில், சமூகத்தின் ஒற்றுமை குறித்து நிமிடத்திற்கு நிமிடம் பேசியவர் அம்பேத்கர், இந்தியாவின் தேசத்தந்தை அவர் மட்டும் தான் என்றார்.
பட்டியலின சமூகத்தில் நடக்கும் ஆணவ கொலைகள் குறித்து அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட கருத்து கூறுவதில்லை. பட்டியலின சமூகத்திற்காக பேசினால், கட்சி நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பயந்து இருந்தால், உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுங்கள்.
நாங்கள் உங்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்வோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே, பொதுமேடையில், தமிழ் சமூகம் பற்றி இயக்குனர் அமீர் பேசிய போது, பா.ரஞ்சித் குறுக்கிட்டு காரசார விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications