அம்பேத்கர் சொன்னார்.. மோடி செய்தார்! பிரதமருக்கு நன்றியோடு இருப்போம் - அண்ணா பல்கலை. துணை வேந்தர்
அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்து உள்ளார்.
சென்னை: அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்து உள்ளார். அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இளைஞராஜா முன்னுரை எழுதிய "மோடியும் அம்பேத்கரும்" என்ற ஆங்கிலத்தில் புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், பேராசிரியர் காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேல்ராஜ் பேச்சு
இந்த விழாவில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் "கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் நான் லண்டனுக்கு சென்றிருந்தேன். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவம் மற்றும் கல்விசார்ந்த அந்த பயிற்சி கூட்டத்தில் இந்தியாவில் இருந்து 30 பேராசிரியர்கள் சென்றிருந்தோம். அந்த 2 வார காலத்தில் குஜராத் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் என்னிடம் பேசினார்.

அம்பேத்கர் மீதான மரியாதை
அவர் என்னிடம் அம்பேத்கர் அருங்காட்சியகத்துக்கு வர அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிரா அரசு அதை உருவாக்கியது. நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், அப்போது அது மூடப்பட்டு இருந்தது. அந்த பேராசிரியர் அதனால் அதிருப்தி அடைந்தார். வேறு அழியில்லாமல் அந்த அருங்காட்சியகத்துக்கு முன் அவர் கோயிலில் வழிபடுவதைபோல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

12 பகுதி கொண்ட புத்தகம்
அம்பேத்கர் மீது மக்கள் எவ்வளவு மரியாதை தருகிறார்கள் என்பதற்கு இது உதாரணம். இந்த புத்தகம் அம்பேத்கரின் கொள்கைகளுடன் புதிய இந்தியாவின் வளர்ச்சி எப்படி ஒன்றிணைகிறது என்பதை காட்டுகிறது. உள்கட்டமைப்பு, கல்வி, சமூக பொருளாதார இயக்கம், பாலியல் சமத்துவம், சுய சார்பு என 12 பகுதிகள் இந்த புத்தகத்தில் உள்ளன.

பிரதமர் மோடிக்கு புகழாரம்
நம்பிக்கை, பெருந்தன்மை, ஊக்கம், அறிவு ஆகிய 4 முக்கிய அம்சங்கள் ஒரு வெற்றிகரமான தலைவராக இருக்க தேவை. உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும், இந்தியாவில் தற்போது இருக்கும் தலைவர் ஜி20 தலைமையை ஏற்று நாட்டுக்கு பெருமையை தேடித்தந்து இருக்கிறார். "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று அறிவித்து அம்பேத்கரின் சமத்துவ கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலித்து உள்ளார்.

மோடிக்கு நன்றியோடு இருப்போம்
கடந்த முறை நடைபெற்ற நமது பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நமது மாணவர்களிடம் பேசியதற்காக அவருக்கு நன்றியுடன் இருக்கும். கல்வி என்பதன் நோக்கம் மக்களை ஒழுக்கமாகவும் சமூகமயமாக்கவும் செய்யும் என்று அம்பேத்கர் தெரிவித்தார்.

மோடி செயல்படுத்துபவர்
கல்வி என்பது நம்மை சுயசார்புடையவராகவும், சுய மரியாதையுடனும் சமூகத்தில் வாழ வைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாம் சீர்திருத்தவாதியான அம்பேத்கர் பற்றியும் செயல்படுத்துபவரான மோடியை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். இருவரும் அரசியல் கடந்து பல துறைகளில் சாதித்து உள்ளனர்.

இந்தியா விஸ்வ குருவாகும்
அம்பேத்கரின் கொள்கைகளை மோடி செயல்படுத்தி வருகிறார். சுயசார்பு இந்தியா, இந்தியா முதல் ஆகிய அம்பேத்கரின் 2 கனவுகளை மோடி செயல்படுத்துகிறார். இந்தியா விஸ்வ குருவாக மாறி அதன் கலாச்சார பெருமைகளை உலகின் அனைத்து நாடுகளுக்கும் காட்டும். இந்தியா தலைமை ஏற்பதற்கான காலம் இது. ஒன்றாக செல்வோம். ஒன்றாக வளர்வோம். வாழிய செந்தமிழ். வாழ்க பாரதம். வாழ்க வையகம்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications