ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர்
சென்னை: விஜய் அரசியலுக்கு வந்திருந்தது ஒரு தரப்பினரிடையே வரவேற்பை ஏற்படுத்தியிருந்தாலும், பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான அமீர், விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது என்று அமீர் கூறியிருக்கிறார்.
ரஜினி அரசியலுக்கு வந்தார். ஆனால், அரசியல் பற்றி அவர் போதுமான அளவில் அறிந்திருக்கவில்லை. எனவே மீண்டும் சினிமாவுக்கு போய்விட்டார். விஜய் தற்போது வந்திருக்கிறார். அவர் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது என்று அமீர் கூறியிருக்கிறார்.

விஜய் மீதான விமர்சனங்கள்
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். அது ஜனநாயக உரிமை. ஆனால், கட்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறதா? அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறாதா? யார் நலனுக்காக கட்சிகள் இருக்கின்றன? என்கிற கேள்வியில்தான் சிக்கல்கள் எழுகிறது. அந்த வகையில், விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.
அரசியலுக்குள் நுழைந்த விஜய்
அரசியல் தலைவர்களாக இன்று இருப்பவர்கள், குறைந்தபட்சம் மாணவர் பருவத்திலிருந்து அரசியலில் இருந்திருக்கின்றனர். ஆனால், விஜய் சினிமாவில் இருந்துவிட்டு இப்போது வந்து, நாட்டை திருத்தப்போகிறேன் என்று சொல்வதெல்லாம் என்ன அரசியல் புரிதல்? என்று கேள்வி எழுப்பியிருகின்றனர்.
கோடி கோடியாய் சம்பாதித்தவர், அந்த பணத்தை கொண்டு சேவை செய்ய வந்திருக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இயக்குநர் அமீர் எழுப்பியிருக்கும் கேள்வி கவனம் பெற்றிருக்கிறது.
விஜய்க்கு அமீர் அட்வைஸ்
"அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவரை எதிர்த்தேன், பின்பு அவர் தன்னை திருத்தி கொண்டு அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிக்க சென்றார். இன்றும் அதே போல விஜய்யும் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். விஜய்யும் கட்சியை கலைத்து விட்டு சென்றால் அவருக்கு நல்லது" என்று கூறியிருக்கிறார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications