சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி ஆலை.. அதென்ன கொரில்லா கண்ணாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு அமையவுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் எனும் நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்கு பாதுகாப்பு கண்ணாடி தயாரித்து வருகிறது. இதற்கான ஆலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் அமையவுள்ளது.

Americas Corning company to build Rs 1000 crore Gorilla glass factory

பிளக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கார்ன் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூரிலேயே கார்னிங் நிறுவனமும் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெறுகிறது.

பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் இடத்தில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் தரப்படும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கண்ணாடியை சப்ளை செய்யும் நிறுவனம் இந்தியாவில் அமைகிறதையே காட்டுகிறது.

முன்னதாக தெலுங்கானாவில் செப்டம்பர் மாதம் இந்த நிறுவனம் அமைவதாக இருந்தது. ஆனால் தெலுங்கானாவை விட தமிழகத்திலேயே இந்த நிறுவனத்தை அமைக்க நிர்வாகத்தினர் விரும்பினர்களாம். தமிழகத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான சூழல் உள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனுக்கு இதர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழகத்தில் உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் நிறுவனத்தை அமைக்க ஓராண்டு ஆகும் என தெரிகிறது. பாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு தமிழகம் தாய் வீடாக திகழ்கிறது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலில் 30 மில்லியன் எண்ணிக்கையில் கண்ணாடிகளை தயாரிக்கும்.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கண்ணாடிகள் ஆப்பிள் ஐபோன், ஐபாடுகளுக்கு பாதுகாப்பு அம்சங்களாக திகழ்கின்றன. இவற்றை கீழே போட்டாலும் போனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த நிறுவனம் இந்த கண்ணாடி மட்டுமல்லாமல் பீங்கானையும் உற்பத்தி செய்கிறது. இந்த கண்ணாடி அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது. மெல்லிய தடிமன் கொண்டதாகும்.

கொரில்லா குரங்கை பயன்படுத்தி அதன் ரோமங்களை வைத்துதான் இந்த கண்ணாடிகள் தயாரிக்கப்படுவதாகவும் இதற்காக நிறைய கொரில்லாக்களை கொல்வதாகவும் தகவல்கள் வந்தன. இதை யாரும் நம்ப வேண்டாம். அயனி மாற்றம் அடைவதால்தான் அந்த கண்ணாடிகள் மிகவும் வலிமையானவைகளாக இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+