• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: "மெசேஜ் வந்தது.. அண்ணாமலை சொல்லியே செய்தேன்!" பிடிஆர் கார் தாக்குதல்.. Dr. சரவணன் பரபர

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் பிடிஆர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு டாக்டர் சரவணன் அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

  PTR மீது செருப்பு வீசப்பட்டது பாஜகவின் திட்டம்- Dr. சரவணன்

  பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைத் தேர்ந்த வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிட்டுத் திரும்பிய நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதற்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதில் பாஜகவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   கல்வி தொலைக்காட்சியின் தற்காலிக சிஇஓ-ஆக மணிகண்ட பூபதி நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு கல்வி தொலைக்காட்சியின் தற்காலிக சிஇஓ-ஆக மணிகண்ட பூபதி நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

  தாக்குதல்

  தாக்குதல்

  அதன் பின், அமைச்சர் பிடிஆரை நேரில் சந்தித்த மதுரை பாஜக மாவட்ட தலைவராக இருந்த சரவணன் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதற்கு மறுநாளே அண்ணாமலையும் சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், செருப்பு வீச்சு சம்பவத்திற்கு டாக்டர் சரவணன் தான் காரணம் என்று பாஜக மாநில ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டி இருந்தார்.

  சிறப்புப் பேட்டி

  சிறப்புப் பேட்டி

  இந்நிலையில், ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு டாக்டர் சரவணன் அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்ற கேள்விக்குப் பதில் அளித்த சரவணன், "என்னிடம் அவர்கள் 200 தொண்டர்களுடன் வர வேண்டும் என்று கூறியிருந்தனர். ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்று நினைத்தே ஆட்களை அழைத்துச் சென்றேன்.

  தெரியவில்லை

  தெரியவில்லை

  இதற்காகவே ஆட்களை அழைத்து வரச் சொன்னார்கள் என நினைத்ததேன். அண்ணாமலையும் இதையே நினைத்து இருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு அரசு பிரதிநிதிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி எனத் தெரிந்திருக்கும் என்று இப்போது பலரும் கூறுகின்றனர். விமான நிலையத்துக்குச் சென்றதுக்குப் பதில் வீட்டுக்குத் தான் நாங்கள் சென்று இருக்க வேண்டும். வீட்டிலிருந்து தகனம் செய்யும் இடம் வரைக்கும் கூட சென்று இருக்கலாம்.

  சந்திப்பு

  சந்திப்பு

  அங்கு அமைச்சரின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மன அமைதியைக் கெடுத்துவிட்டது. இதில் ஏதோ ஒரு வகையில் நானும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற எண்ணமே என்னை அமைச்சர் பிடிஆரை நேரில் சந்திக்க வைத்தது. அங்கு நான் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிப்பதாகக் கூறினார்கள். அப்போது தான் இந்த மோசமான நிகழ்வு நடந்துவிட்டது. இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

  அண்ணாமலை கூறியபடியே

  அண்ணாமலை கூறியபடியே

  நான் யாருக்கும் இப்படி ஒரு உத்தரவைக் கூறவில்லை. அவர்களை அழைத்துச் சென்றது மட்டுமே என்னுடைய வேலை. புரோட்டாகால் படி நான் அங்குச் செல்லக் கூடாது என அதிகாரிகள் கூறியிருந்தால் நான் அங்குச் சென்று இருக்கவே மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இது திட்டமிட்ட நிகழ்வாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அண்ணாமலை உதவியாளர் மொபைலில் இருந்து எனது உதவியாளர் மொபைலுக்கு மெசேஜ் வந்தது. வலுவான வார்த்தைகளுடன் கூடிய பிரஸ்மீட் கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதன்படியே நான் பிரஸ்மீட் கொடுத்தேன்" என்றார்.

  நிர்மல் குமார் குற்றச்சாட்டு

  நிர்மல் குமார் குற்றச்சாட்டு

  தொடர்ந்து நிர்மல் குமார் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய டாக்டர் சரவணன், "அவர் சினிமா கதை போல கூறி வருகிறார். அவர் அந்த இடத்தில் இருப்பதால், இப்படிச் சொல்லி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். திமுகவில் சேர நேரடியாக அமைச்சரைச் சந்தித்து இருப்பேன். இந்தளவு பிளான் போட்டு சேர வேண்டிய அவசியம் இல்லை. மதுரை புறநகர் நிர்வாகிகளே இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதில் என்னையும் மீறி சில சம்பவங்கள் நடந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். இப்போது பார்க்கும் பொழுது இதற்கு முழுவதும் காரணமும் பாஜக என்றே கருதுகிறேன்" என்றார்.

  English summary
  Doctor Saravanan says he is not related to Minister PTR car attack: (அமைச்சர் பிடிஆர் கார் செருப்பு வீச்சு டாக்டர் சரவணன் விளக்கம்) Reason why Doctor Saravanan removed from BJP.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X