ஏசியே வேணாம்.. வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்.. இத மட்டும் செஞ்சி பாருங்க போதும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசி, ஏர் கூலர்கள் இல்லையென்றாலும் கூட நம் வீட்டையும் ஜில்லென மாற்ற முடியும். கொளுத்தும் வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பி நம்மால் முடிந்த சில விஷயங்களை செய்தாலே போதும், நம் வீட்டிலும் குளிர்ச்சியான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும். இயற்கையான முறையில் கொஞ்சம் குளிர்ச்சியாக வைத்து இருக்க கூடிய சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

கோடை வெயில் துவங்கும் முன்பே இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் உக்கிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியில் போனால்தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிற்குள் இருந்தால் கூட வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. வீட்டில் ஏசி வைத்து இருப்பவர்கள், வெயிலின் தாக்கம் தெரியாமல் தப்பித்துகொள்வார்கள். ஆனால் ஏசி இல்லாதவர்கள் 24 மணி நேரமும் ஃபேன் ஓடவிட்டாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவது இல்லை.

Summer AC Heat

கிராமப்புறங்களில் கூட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த கொளுத்தும் வெயிலுக்கு நடுவே.. வீட்டை இயற்கையான முறையில் கொஞ்சம் குளிர்ச்சியாக வைத்து இருக்க கூடிய சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

எதிரெதிர் திசையில் ஜன்னல்கள்

* வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை, வீட்டை நல்ல காற்றோட்டமாக வைத்து இருப்பதுதான். காற்று எளிதில் வந்து செல்லும் வகையில் ஜன்னல்களை வைத்து இருக்க வேண்டும். எதிரெதிர் திசையில் ஜன்னல்கள் வைத்தால் எளிதாக வந்து செல்லும். இதனால், வெயிலின் தாக்கம் அவ்வளவாக உணர முடியாது. காலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல்களை திறந்து வைத்தால் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வந்து செல்லும். இதனால் அறையின் வெப்ப நிலை குறைவாக இருக்கும்.

ஜில்லென காற்று வர வேண்டுமா

* வீட்டில் ஏசி, ஏர்கூலர்கள் இல்லாதவர்கள் குளிர்ந்த காற்று வீச வேண்டும் என நினைத்தால் இதை முயற்சித்து பார்க்கலாம். அதாவது, டேபிள் பேனுக்கு முன்பாக ஐஸ்கட்டி, அதிகமாக குளிர்ந்த நிலையில் உள்ள நீர் அடங்கிய ஒரு கிண்ணத்தை வைக்க வேண்டும். பேனில் இருந்து வரும் காற்று இந்த நீரில் பட்டு, குளிர்ச்சியாக உணரவைக்கும். இதனால் அறை முழுவதிலும் ஜில்லென்ன உணரலாம். ஆனால் இது சிலருக்கு சளி உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

* ஜன்னல் ஓரங்களில் பல வீடுகளில் செடிகள் வைத்து இருப்பதை பார்க்க முடியும். அழகுக்காக மட்டும் இன்றி வெப்பத்தின் தீவிரத்தை குறைக்கவும் ஜன்னல் ஓரங்களில் செடிகளை வளர்க்கலாம். கொடி போன்ற வளரும் தாவரங்களாக இருந்தால் ஜன்னல் கம்பிகளில் பரவ விடலாம். இது பார்ப்பதற்கு அழகாக மட்டும் இன்றி வெப்பத்தை குறைக்கவும் உதவும். காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்து வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவும். இதனால், வீட்டிற்குள் கொஞ்சம் உஷணம் குறையும்.

மாடித்தோட்டம்

தற்போது எல்லாம் நகர்ப் புறங்களில் பல இடங்களிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து இருப்பதை பார்க்க முடிகிறது. மாடிகளில் மாதுளை போன்ற சிறிய இட வசதியில் வளரக்கூடிய பழச்செடி மரங்களையும் கூட வளர்க்கிறர்கள். மாடிகளில் இப்படி செடி, கொடிகளை வளர்க்கும் போதும் வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் பெருமளவு குறையும். ஏனெனில் வெயிலின் நேரடி தாக்கத்தை இந்த செடிகள் பெற்றுக்கொள்ளும்.

இதனால் வீட்டிற்குள் வெயிலின் தாக்கம் ரொம்பவே குறையும். அதிலும் பகல் நேரத்தில் வெயில் என்றால் இரவிலும் வீட்டிற்குள் கடுமையான உஷ்ணம் தெரியும். அதுபோன்ற தருணங்களில் இந்த மாடித்தோட்டங்கள் ரொம்பவே கை கொடுக்கும். கான்கீரிட் கட்டிடங்களாக எங்கும் தென்படும் பெருநகரங்களுக்கு கூட மாடித்தோட்டம் ஏற்றதாக இருக்கும்.

மூங்கில் பாய்கள்

* மூங்கிலுக்கு வெப்பத்தை தடுக்கும் சக்தி உள்ளது. இதனால் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களை தொங்க விட்டால் அறை வெப்பம் உள்ளே நுழையாதபடி அவை தடுத்துவிடும். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பது போல வீட்டிற்குள் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

* பகல் நேரத்தில் வெயில் நேரடியாக வீட்டின் மாடியில் பட்டு, வீடு முழுக்க எதோ சுற்றிலும் அனல் வைத்து உள்ளே இருப்பது போல ஒரு ஃபீல் கொடுக்கும். அதிலும் காற்றோட்டம் சரிவர இல்லாத நெருக்கடி நிறைந்த பகுதிகளில் வீடு இருந்தால் சொல்லவே வேண்டாம்.. பகல் மற்றும் இரவு என எந்நேரமும் வெயிலின் தாக்கம் பாடாய்படுத்தும். இதுபோன்று வீட்டின் கூரை வழியாக வெப்பம் வீட்டிற்குள் இறங்குவதை தடுக்க சிறந்த வழிகளில் ஒன்றாக வீட்டின் வெளிப்புற மேல் தளத்தில் ஒயிட் வாஷ் செய்வது.

ஒயிட் வாஷ்

வெள்ளை நிறம் என்பது ஒளியை பெருமளவு பிரதிபலிக்கும் இதனால், வெப்பம் வீட்டிற்குள் இறங்குவது கொஞ்சம் தடுக்கப்படும். எனவே வெயில் காலத்திற்கு முன்னால் ஒயிட் வாஷ் செய்வது கொஞ்சம் பலன் கொடுக்கும். இது நீண்ட காலம் பயன்கொடுக்காது. மழை காலத்தில் சுத்தமாக கரைந்துவிடும். அப்போது மீண்டும் அடிக்க வேண்டியிருக்கும்.

* வீட்டின் ஜன்னலை ஒட்டி திரைச்சீலைகள் போன்றவற்றை பயன்படுத்தும் போது வெயில் நேரடியாக அறைக்குள் விழுவதை தடுக்க முடியும். இதன் மூலம் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அதேபோல தேவையற்ற பொருட்கள் கிடந்தால் சுத்தப்படுத்தி வைக்கலாம். வெப்பத்தை தக்க வைக்க கூடிய புத்தகங்கள், பேப்பர்கள், பர்னிச்சர்கள், எலக்ட்ரிக் பொருட்கள் இவற்றை சுத்தப்படுத்தி ஜன்னல் திறந்து வைத்தால் வெப்ப நிலை குறையும். வீட்டிற்குள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+