நடிகர் சங்கத்தில் நடந்த திடீர் கொண்டாட்டம்.. கார்த்தி தலைக்கேறிய பரிவட்டம்.. அன்னதானத்துடன் விழா
சென்னை: நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த கொண்டாட்டத்தில் நடிகர் கார்த்திக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதன்பிறகு அவர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.
நடிகர் கார்த்தி தற்போது ‛மெய்யழகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது அவரது 27 வது திரைப்படமாகும். இந்த படத்தை 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

திரைப்படத்தில் அர்விந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது படத்துக்கான புரோமோஷன் விழாவில் நடிகர் கார்த்தி பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் இன்று சென்னை நடிகர் சங்கத்தில் கார்த்திக்கிற்கு பரிவட்டம் கட்டி விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கார்த்தி பொருளாளராக இருக்கிறார்.
இந்நிலையில் தான் நடிகர் கார்த்திக்கிற்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதேபோல் அவருடன் இருந்த பிற நிர்வாகிகளுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நடிகர் கார்த்தி உள்பட அவருடன் இருந்த நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த பல கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி பொதுமக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் பொது இடங்களிலும் போலீசாரின் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் விநாயகர் சதுர்த்தி என்பது கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் மிகவும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications