சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ சோதனை.. அடுத்தது என்ன? அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் அமித்ஷா..பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கேரளா, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் பிஎப்ஐ எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், பிரமுகர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தப்படும் நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர், என்ஐஏ அதிகாரிகளுடன் அவர் சோதனை பற்றியும், கைது நடவடிக்கை குறித்தும் கேட்டு அறிந்தார்.

மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றியும், உரிய பாதுகாப்பு பற்றியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ விசாரணை.. இளையான்குடியில் பரபரப்பு.. பின்னணி! பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ விசாரணை.. இளையான்குடியில் பரபரப்பு.. பின்னணி!

என்ஐஏ சோதனை

என்ஐஏ சோதனை

கேரளாவின் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத்துறை எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையை துவங்கினர். இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் சோதனை நடக்கிறது. மேலும் கோவை, கடலூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில நெல் பேட்டை, கோரிப்பாளையம், கோமதிபுரம், குலமங்கலம் வில்லாபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனை நடக்கிறது. மேலும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தல், மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் மக்களை சேர ஊக்குவித்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான புகாரில் இந்த சோதனையை என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின்போது பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

100க்கும் மேற்பட்டவர்கள் கைது

100க்கும் மேற்பட்டவர்கள் கைது

இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் நடக்கும் சோதனையின்போது என்ஐஏ மற்றும் அந்ததந்த மாநில போலீசார் இணைந்து 100க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 20 பேர், அசாமில் 9 பேர், உத்தர பிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், டெல்லி, புதுச்சேரியில் 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் என கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 அமித்ஷா ஆலோசனை

அமித்ஷா ஆலோசனை

இதனால் தொடர்ந்து பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தான் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர், என்ஐஏ அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த வேளையில் சோதனை பற்றியும், கைது நடவடிக்கை குறித்தும் கேட்டு அறிந்தார். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றியும், உரிய பாதுகாப்பு பற்றியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Union Home Minister Amit Shah has made a sudden consultation in Delhi while the NIA is conducting raids on the offices of the Popular Friend of India organization and the houses of celebrities in many places across the country, including Kerala and Tamil Nadu. They are said to have discussed the test and the next course of action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X