இந்த மாத மின் கட்டணத்தை.. பொதுமக்களே கணக்கிடலாம்.. போட்டோ அனுப்பினால் போதும்..மின் வாரியம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதத்திற்கான மின்சார பயன்பாட்டை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்த மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் இந்த மாதத்திற்கான மின் கணக்கீட்டைச் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான மின்சார பயன்பாட்டை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்த மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்துக்கான மின் கட்டணத்தைப் பொதுமக்கள் சுய கணக்கீடு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதைப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்வழியாக அந்தந்த பகுதி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டுக் கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்" என அதில் கூறப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications