சென்னைக்கு நாளை ரெட் அலர்ட்! யாரும் வெளியே வர வேண்டாம்! அரிசி, பாலை இப்போதே வாங்கி வையுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் அடுத்த 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

600 மேட்டோர் பம்புகள் தயார் நிலை

600 மேட்டோர் பம்புகள் தயார் நிலை

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள்

மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கனமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செல்ஃபி எடுக்கக் கூடாது.

செல்ஃபி எடுக்கக் கூடாது.

மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்ஃபி புகைப்படம் எடுக்கக் கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்புப் பெட்டிகளைத் தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

உதவி எண்கள் அறிவிப்பு

உதவி எண்கள் அறிவிப்பு

மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைப்பேசி எண்களிலும் மற்றும் 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+