சல்லி சல்லியாய் நொறுங்கிய கனவு..கோட்டை விட்ட விஜய்! 2026 ஐ மறந்து விட வேண்டியதுதான்.. பிரபலம் நறுக்
சென்னை: சென்னை வந்த அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கின்றனர். 20% வாக்கு வங்கியை வைத்திருக்கும் விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என சிலர் கூறிவந்த நிலையில் அந்த கூட்டணி கணக்கு தவிடு பொடியாக இருக்கிறது. பாஜகவை எதிர்ப்பதன் மூலம் இனி அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பில்லை. அரசியல் எதிரியான திமுகவுடனும் விஜய் கூட்டு சேர வாய்ப்பில்லை. இதனால் 2026 தேர்தலை விஜய் மறந்து விட வேண்டும் என கூறியிருக்கிறார் பிரபல வழக்கறிஞரான கேஎஸ் ராதாகிருஷ்ணன்.
தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா எடப்பாடி பழனிச்சாமியை பிரபல நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி உருவானது என உறுதி செய்து இருக்கிறார்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுக சட்டமன்ற தேர்தலில் சந்திக்கிறது. இதனால் அரசியல் களம் தற்போது இருந்து சூடு பிடித்திருக்கிறது. ஆனால், விஜய் கணித்து வைத்த அரசியல் கணக்குகள் தவிடு பொடியாகி இருக்கிறது.
திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என வெளிப்படையாகவே விமர்சித்தார் விஜய். அதனால் அந்த இரு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டார். ஆனால் அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேரலாம் என கூறப்பட்டது. 20% வாக்குகளை விஜய் வைத்திருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூட அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருப்பதால் விஜயின் கூட்டணி கணக்குகள் தவிடு பொடியாகி உள்ளது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்து களமிறங்கி தனது வாக்கு சதவீதத்தினை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் 2026 தேர்தலை விஜய் மறந்து விட வேண்டும் என கூறியிருக்கிறார் பிரபல வழக்கறிஞரான கேஎஸ் ராதாகிருஷ்ணன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," பனையூரில் இரும்புக் கதவை பூட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத தமிழக வார்டு மெம்பர் அளவில் கூட அரசியல் அறிவற்ற புதுச்சேரி அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்தையும், அன்புமணி ராமதாஸையும், சித்தராமையாவையும் ஜான் ஆரோக்கியசாமி என்கிற உலக மகா ஸ்ட்ராஜிஸ்ட்டையும் நம்பி, 20% வரை வாக்குகள் இருக்கிறது அதிமுகவுடன் கூட்டு வைத்தால் நல்ல எதிர்காலம் என நாங்கள் சொன்னதை கேட்காமல் இந்த இரு ஞானசூஞங்களை நம்பி கோட்டை விட்டார் விஜய்.
இது தகர்ந்து, இதனால் நான் கடந்த ஜனவரி முதல் விஜய் பெரிதாகவும் பேசவில்லை . வைகோ, விஜயகாந்த், முதல் விஜய் வரை தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என் போன்றவர்கள் நம்பிக்கை கொண்டோம். அந்த நம்பிய நோக்கில் வெற்றி பெற பெற முடியவில்லை. என்ன செய்வது வருத்தமான கையறு நிலை....என்ன சொல்ல.....!
அரசியல் ஒன்றும் சினிமா அல்ல, ஒரு படத்தில் விட்டால் அடுத்த படத்தில் பிடிக்க. இப்போது என்ன செய்வார் விஜய். 2026 ஐ மறந்து விட வேண்டியதுதான், அடுத்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதியையெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய வைத்தால் இதுதான் நிலை.." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications