அமித் ஷா என்ட்ரியால் மாறிய கணக்கு.. விசிகவை விடாத ஸ்டாலின்.. திமுகவின் மாஸ்டர் பிளானே இதுதான்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தற்போது மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி விவகாரம், திமுக தரப்பைத் திகைக்க வைத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக அதிமுகவுக்கு ஆதரவு தரும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. இந்த ஒட்டுமொத்த அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் டெல்லி மேலிடம், குறிப்பாக அமித்ஷா நேரடியாகக் காய் நகர்த்தி வருவதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்..
News Time TN என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "தவெக செய்த மிகப்பெரிய தவறு, காங்கிரஸை வந்து கூப்பிட்டு கூட்டணியில சேர்த்து கொண்டதுதான்.. விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை பாஜக விரும்பவில்லை.

நேரடியாக லைனில் அமித்ஷா
விஷயம் என்னன்னா, இதுல அமித்ஷா நேரடியாவே லைன்ல இருக்காரு.. அமித்ஷா நேரடியா டைரக்ட் செய்து வருகிறார்.. 1967-க்கு பிறகு காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கெடுக்கக்கூடிய ஒரு அரசாங்கம் மறுபடியும் வருவதை பாஜக விரும்பல..
அதேபோல காங்கிரஸ் செய்த துரோகத்தை திமுகவும் விரும்பவில்லை.. அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு 580 கோடி ரூபாய், அதாவது ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் என்ற அடிப்படையில 28 தொகுதிகளுக்கும் 580 கோடி ரூபாய் செலவு செய்து., தேர்தல் வேலையையும் அவர்களுக்கு செய்துள்ளது திமுக.
திமுக காங்கிரஸுக்கு செய்த செலவு
இதுபோக ஒரு ராஜ்யசபா உறுப்பினரையும் காங்கிரசுக்கு தந்திருக்கு.. ஆனால் இப்போது திடீரென தவெகவுக்கு போயிட்டு அடுத்து வரக்கூடிய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு தரவேண்டும் என்று அக்ரீமெண்ட் போடுறாங்க.
580 கோடி ரூபாய் செலவு செய்து, தேர்தல் வேலையும் பார்த்து, 5 எம்எல்ஏக்களை வெற்றி பெற செய்து,ஒரு ராஜ்யசபா உறுப்பினரையும் வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பியது திமுக..
20 ஆண்டு காலம் கூட்டணியிலும் இருந்ததுடன், யாருமே பிரதமர் என்று சொல்லாதபோது, ராகுல் காந்தியை பிரதமர் என்று அறிவித்தது திமுக.. கேரளாவில் கூட 9 எம்பிக்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்துல 10 எம்பிக்கள் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி காங்கிரஸை முழுசா வளர்த்து வந்தது திமுக.. அப்படிப்பட்ட காங்கிரஸ், இன்று திமுகவுக்கு துரோகம் பண்ணிட்டு போய்விட்டதுதான் திமுகவுக்கு கோபம்.
ஸ்டாலின் தந்த ஒற்றை உறுதி
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவை ஆட்சி அமைக்க செய்வதென்றும், அதற்கு ஆதரவு தருவதென்றும் ஒரு முடிவை எடுக்கும் நிலைமைக்கு திமுக தரப்பில் வந்துள்ளார்கள்.. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் மீதுள்ள கோபம்தான்..
இதையறிந்த தவெக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், காதர் மொய்தீன் உள்ளிட்டோர் ஸ்டாலினை சென்று பார்த்து பேசியிருக்கிறார்கள். "இன்று காங்கிரஸ் வெளியே போயிருக்கக்கூடிய சூழ்நிலையில், நீங்க எதிர்காலத்தில பிஜேபியோட கூட்டணி சேர்வீங்களா" என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஸ்டாலின், "என்னை நம்புங்க என்னுடைய வார்த்தைகளை நம்புங்க, நான் என்னைக்குமே பாஜகவுடன் சேர மாட்டேன், கொள்கை ரீதியா போராடுவோம் சட்டமன்றத்திலும் போராடுவோம். சட்டமன்றத்துக்கு வெளியேவும் போராடுவோம்.. பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக போராடுவோம்" என்றெல்லாம் உறுதி தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு அதே எதிர்ப்பு
அதிமுகவை ஆதரிப்பது என்ற முடிவுக்கு திமுக உடனே வரவில்லை.. குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதாவது பாஜக கொண்டு வரக்கூடிய தவறான திட்டங்கள், அதாவது பிஎம் ஸ்ரீ மாதிரி இருக்கக்கூடிய தவறான திட்டங்களை அதிமுக ஏற்க கூடாது.. உதய் மின் திட்டம் , இந்தி திணிப்பு மாதிரி தவறான திட்டங்களை வந்து ஏற்க கூடாது.. இதுதான் குறைந்தபட்ச செயல் திட்டம்.. இதன் அடிப்படையில்தான் அதிமுகவை ஆதரிப்பது.. ஒருவேளை பாஜகவின் திட்டங்களை அதிமுக அமல்படுத்தினால், அவர்களுக்கு தரும் ஆதரவை, திமுக உடனே வாபஸ் பெற்றுவிட வேண்டும்.. இந்த ரீதியில்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிறகே மற்ற கூட்டணி தலைவர்களும், "நாங்களும் தவெகவுக்கு ஆதரவை தர மாட்டோம்" என்று உறுதி பட ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி, ரஜினிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை " என்றெல்லாம் தாமோதரன் பிரகாஷ் அந்த சேனலில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications