“கூட்டணி ஆட்சி இல்லை.. இங்கு நான் தான்.. அமித் ஷா அப்படித்தான் சொன்னார்..” எடப்பாடி பரபர பேட்டி!
சென்னை: பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடிய நிலையில், செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவரிடம் அமித் ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என்று கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "கூட்டணி அரசு என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லவே இல்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டிற்கு என் பெயரைச் சொன்னார்.
இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம்.பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தெரியும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இன்று அமைச்சர்களின் மீது விதி எண் 72 இன் கீழ் அமைச்சரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதை கண்டித்து இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
அமைச்சர்கள் கே.என் நேரு, பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். ஆனால் சபாநாயகர் அதை இன்று எடுத்துக்கொண்டு எங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை. கடந்த காலங்களில் இது போன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் இரவில் எடுத்துக்கொண்டு வாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இன்று அனுமதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications