மத்திய பணிக்கு அனுப்புங்க! தமிழ்நாட்டின் 2 மாஸ்டர் மைண்டுகளை தூக்கிய அமித் ஷா? அப்போ ஸ்டாலின் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் உள்ள டாப் ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி உள்துறை பொறுப்புகள், புதிய அமைச்சரவையில் செயலாளர் பொறுப்புகள், சிஏபிஎஃப்/சிபிஐ/ஐபி/என்ஐஏ/என்எஸ்ஜி போன்றவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வசதியாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் போதுமான நியமனங்களை, குறிப்பாக எஸ்பி அளவில் உள்ள ஐஜி முதல் டிஐஜி வரை போதுமான அதிகாரிகளை உள்துறைக்கு அனுப்புமாறு மாநிலங்களுக்கு எம்ஹெச்ஏ கடிதம் எழுதி உள்ளது.

IAS

ஐஜி பதவியில் 25 இடங்களும், டிஐஜி தரவரிசையில் 81 இடங்களும், எஸ்பி பதவியில் 129 இடங்களும் காலியாக உள்ளன. இது போக அமைச்சரவையில் செயலாளர் பொறுப்புகள் பல காலியாக உள்ளன.

பெரும்பாலான அதிகாரிகள் மத்திய பணிகளை தேர்வுசெய்யும் முன் குறைந்தபட்சம் டிஐஜி பதவி, அல்லது முதன்மை செயலாளர் பதவி வரை தங்களுடைய மாநில கேடர் பதவிகளில் நீடிக்கவே விரும்புகிறார்கள் என்று மாநிலங்கள் மத்திய உள்துறைக்கு பதில் அளித்துள்ளதாம்.இதனால் அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

என்ன பிரச்சனை: பொதுவாக இந்திய ஆட்சி பணிக்கு ஒருவர் தேர்வான பின் அவருக்கு இரண்டு இடங்களில் பொறுப்புகள் வழங்கப்படலாம். ஒன்று ஒன்றிய பொறுப்பு, அல்லது மாநில பொறுப்பு. ஒன்றிய பொறுப்பு ஒன்றால் மத்திய அரசின் பணியில் ஐஏஎஸ் அதிகாரி தேர்வு செய்யப்படலாம்.

அதே சமயம் சிலர் மாநில அரசு பணிக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்படலாம். உதாரணமாக செயலாளர், மாவட்ட ஆட்சியர், மற்ற துறை தலைவர் என்று பல பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அதேபோல் ஒன்றிய பணிக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளும் மத்திய அரசின் பல பணிகளுக்கு தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.

மாநில அரசு பணி: இப்படி மாநில அரசு பணிக்கு தேர்வாகும் ஒருவரை மத்திய அரசு பணிக்கு அழைக்க முடியும். உள்துறை அமைச்சகம் இவரை அழைக்கும் பட்சத்தில் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். சில சமயங்களில் அதிகாரிகளை மாற்றுவதில் குழப்பம் ஏற்படும்.

உதாரணமாக மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை மாநில பணியில் இருந்து விடுவித்து மத்திய பணிக்கு அனுப்பி வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லி உள்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டது. மாநில பணியில் இருக்கும் ஒருவரை, அதுவும் தலைமை செயலாளர் ஒருவரை இப்படி மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது பெரிய சர்ச்சையானது.

ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்ப முடியாது. இங்கு கொரோனா, யாஸ்ஸ் புயல் என்று நிலைமை சரியில்லை. என்ன நடந்தாலும் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்பி முடியாது. தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அழைப்பது தவறான உதாரணமாகும், இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது, என்று கூறினார். இந்திய மோதல் மோசமான நிலையில் ஆலன் பந்தோபத்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி செல்லும் அதிகாரிகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் டாப் செயலாளர்களாக இருக்கும் 2 பேர் டெல்லி செல்ல அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இரண்டு பேருமே தற்போது தமிழ்நாட்டில் மிக பெரிய செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். முக்கியமான சில துறைகளே அவர்களுக்கு கீழ்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் டாப் சாய்ஸ் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே தற்போது டெல்லிக்கு மத்திய பணிக்கு செல்ல இருக்கின்றனர். தமிழக அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தல் வரை அந்த அதிகாரிகளை அனுப்ப விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+