வரப்போகிறார் அமித்ஷா.. அதிரடியில் அறிவாலயம்.. கனிமொழிக்கு பதவி.. அழகிரிக்கும் கிரீன் சிக்னல்?
23ம் தேதி திமுக தரப்பில் அறிவாலயத்தில் கூட்டம் நடக்க உள்ளது
சென்னை: அமித்ஷா வருகை அறிவாலயத்தையே கிடுகிடுக்க வைத்து வருவதாக கூறப்படுகிறது.. அமித்ஷாவின் வருகையொட்டி, திமுகவில் எடுக்கப்போகும் அதிரடிகளே இப்படிப்பட்ட யூகத்துக்கு காரணமாக இருக்கிறது!
அமித்ஷா வரும் 23-ம் தேதி தமிழகம் வர போகிறார்.. சொந்த கட்சி விஷயமாகவும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அவர் வருவதாக எல்.முருகன் தெரிவித்திருந்தார்.. அப்படியே முதல்வரையும் சந்தித்து கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைதவிர வேறு சில விஷயங்களும் அமித்ஷாவின் வருகையினால் நடக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.. ஒன்று, முக அழகிரி விவகாரம்!

பாஜக
ஆரம்பத்தில் இருந்து அழகிரியை அழைத்து கொண்டிருக்கும் பாஜக, இந்த முறையும் அவரை தனித்துவிட தயாராக இல்லை.. ஒன்று அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும், அல்லது பாஜகவுக்கு வெளியில் இருந்தாவது ஆதரவு தர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதாவது அழகிரி வைத்து திமுக ஓட்டுக்களை பிரிக்கும் முயற்சி இதுவாகும்.

அமித்ஷா
அந்த வகையில், அழகிரியை அமித்ஷா சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.. அதேபோல, ரஜினியை சந்திக்கும் ஒரு எண்ணமும் அமித்ஷாவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், ரஜினியை ஒருமுறை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.. அந்த வகையில் அமித்ஷா ரஜினியை சந்திக்க நேரிடலாம்.. அழகிரியும், ரஜினியையும் அமித்ஷா சந்தித்து பேசுவதுதான், திமுக தரப்புக்கு சற்று லேசான கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.

அறிவாலயம்
23-ம் தேதி, திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது.. இதில், எப்படியும் காங்கிரசுக்கான தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்றாலும், மிக முக்கியமாக பீகார் சட்டசபை தேர்தல் முடிவு பற்றியும், பாஜகவின் எழுச்சி பற்றியும் நிச்சயம் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பாஜகவின் வெற்றியானது, வரும் தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற கிலி திமுக தலைமையிடத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அழகிரி
அந்த வகையில், 23ம் தேதி கூட்டத்தில் இவை பற்றி பேசப்படும்.. அதேசமயம், வரும், 20ம் தேதி, மதுரையில் தன்னுடைய முக்கியமான ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 25 பேரை அழைத்து அழகிரியும் பேசவிருக்கிறார்.. அவர் எதற்காக, என்ன பேச போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால் எதுவாக இருந்தாலும், அது நிச்சயம் திமுகவுக்கு பாதிப்பை தருவதுதான்.. அதனால் அழகிரியை சரிக்கட்ட அல்லது கட்சிக்குள் மறுபடியும் கொண்டுவர நிச்சயம் இந்த திமுக கூட்டத்தில் ஏதாவது பேச்செழுப்பப்படும் என்கிறார்கள்!

கனிமொழி
இதனிடையே மற்றொரு தகவலும் கசிந்துள்ளது.. தென் மண்டலத்தில் திமுகவின் உட்கட்சி பூசல் உருவாகி உள்ளதாம்.. வழக்கமாக தென்மண்டல வாக்குகள்தான் திமுகவுக்கு பெருமளவு கைகொடுக்கும்.. அந்த வகையில், இந்த பூசலை தடுத்து நிறுத்தி சுமூக வழிக்கு கொண்டு வர, கனிமொழியிடம் அந்த பொறுப்பை தரலாம் என்கிறார்கள.. மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழிக்கு, தென் மண்டல பொறுப்பாளர் பதவி வழங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாம்..

திமுக
இந்த கோரிக்கையை ஒருசில மாதங்களுக்கு முன்பே கனிமொழியின் ஆதரவாளர்கள் முன்வைத்திருந்தனர் என்பதையும் நினைவுகூர வேண்டி உள்ளது! ஆக, அமித்ஷாவின் வருகையினால், அழகிரி பற்றின பேச்சு, கனிமொழிக்கு புதிய பதவி, பாஜகவின் திட்டங்களை முறியடிக்கும் சூட்சுமம் , ரஜினி குறித்த அலர்ட் என நாலாபக்கமும் திமுக தன் கவனத்தை திருப்பி வருகிறது!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications