பாக்கி இருக்கு.. நேரடியாக களமிறங்கும் அமித்ஷா! என்டிஏவுக்காக விழும் விக்கெட்டுகள்? தேதி குறிச்சாச்சு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்டிஏ கூட்டணியை பாஜக முழு வேகத்தில் வலுப்படுத்தி வருகிறது. இருப்பினும், கூட்டணிக்கு இன்னும் ஆள் சேர்க்க வேண்டி உள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக களமிறங்க உள்ளார். ஜன.28,29ம் தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
இந்த வருகையின் போது என்டிஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பார் என்றும், அதன் பின்னர் மீண்டும் ஒரு என்டிஏ பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் பிரதானமாக இருந்தாலும், அதைத் தாண்டி தேமுதிக, ராமதாஸின் பாமக உள்ளிட்ட கட்சிகள் மேடையில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பிரேமலதாவை சமாளிக்க தங்கமணியும், சிவி சண்முகமும் களமிறக்கப்பட்டன. பிரதமர் மதுராந்தகம் வருவதற்கு சற்று முன்னர் வரை பேச்சுவார்த்தைகள் நீடித்தன.
ஆனால், ஒரு ராஜ்யசபா சீட்+ தேர்தலுக்கு கவுரவமான தொகுதிகள் ஒதுக்கினால், பிரதமரை சந்திக்கலாம் என்று கறார் காட்டிவிட்டார். எனவே அவரை மேடையேற்ற முடியவில்லை. அதேபோல விஜய் விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எத்தனை கட்சிகள் மேடை ஏறுகின்றன என்று.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications