மக்களின் கனிவான கவனத்திற்கு.. இன்று அம்மா உணவகங்கள் இயங்கும்.. மூன்று வேளையும் சுடச்சுட சாப்பிடலாம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு தாக்கி வருகிறது. கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சத்தில் சென்று வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மீண்டும் முழு ஊரடங்கு
கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு இந்த வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை 30 மணி நேரம் அமலில் இருக்கும்.

அம்மா உணவகங்கள் இயங்கும்
இன்று அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது என்பதால் டீக்கடைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று தெரிகிறது.

மூன்று வேளையும் தரமான உணவு
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இங்கு காலையில் இட்லி, மதியம் கலவைச் சாதங்கள், இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் என மூன்று வேளைகளிலும் மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருப்பதால் அம்மா உணவகங்கள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு அறிவுறுத்தல்
அதன்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் இன்று செயல்பட்டு வருகின்றன. இன்று அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்துக்கு சாப்பிட செல்பவர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் என அனைத்து காலங்களிலும் அம்மா உணவகம் மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பித்தக்கது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications