சிலிண்டர் தட்டுப்பாட்டிலும் தடையின்றி இயங்கும் அம்மா உணவகங்கள்.. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சுமார் 16 நாட்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஸ்தம்பிக்க தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடிகளிலும் இயங்கும் சென்னை அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. (Amma unavagam)
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சமையல் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடல், உணவு பட்டியல் குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள்.
வீட்டு பயன்பாடு முன் பதிவுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். தேவைக்கு மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். தேவையற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். பதுக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதனால் பிரபல உணவகங்ளே தடுமாறி கொண்டிருக்கின்றன. சென்னையில் பல பிரபல உணவங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அம்மா உணவகங்கள் சீராக இயங்கி வருகின்றன. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் வருகை 25-50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக அண்ணா நகர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அம்மா உணவகங்களில் தேவையான கேஸ் சிலிண்டர்கள் இருப்பதை உறுதி செய்து தடையின்றி உணவளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications