Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல.. டிடிவிக்கு எதிராக நிர்வாகிகள்? எல்லாம் எடப்பாடியால் வந்ததாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்பதை ஏற்க முடியாது என அமமுக நிர்வாகிகளுக்கு சிலர் போர்க்கொடி தூக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜயுடன் கூட்டணி செல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட பின்னர், தினகரன் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' (அமமுக) என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தலும், 2024 மக்களவை தேர்தலும் அமமுக தனித்தனியாகவும். சில் தேர்தல்களில் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்றிருந்தது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதே தினகரனின் விருப்பமாக இருந்தது.

TTV Dhinakaran AMMK Edappadi Palaniswami

பாஜக - அதிமுக கூட்டணி

இந்நிலையில், பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவானது. இதன் காரணமாக, அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாகக் கூறி இருந்தார். ஆனால், அந்த நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டது. அந்த முயற்சிகளுக்கு தற்போது ஓரளவு பலன் கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அமமுக பாஜக கூட்டணி

தினகரனின் பேச்சிலும் சமீப காலமாக மாற்றம் காணப்படுகிறது. எந்த கூட்டணியில் அமமுக் இணையும் என்பது குறித்து, அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியே அறிவிக்கும் என அவர் கூறியிருப்பது, புதிய அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

அதன் ஒரு பகுதியாக டிடிவி தினகரனையும் அழைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியை ஏற்கக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் டிடிவி தினகரனுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். பாஜக தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியதாக தெரிவிக்கின்றன.

அமமுக நிர்வாகிகள்

ஆனால், அதிமுக தரப்பு ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அவர் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தால், அமமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக தொண்டர்களே எதிராக செயல்பட்டு தோற்கடிக்கும் அபாயம் இருப்பதாகவும் நிர்வாகிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

டிடிவி தினகரன் அமமுக

அதுமட்டுமின்றி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அரசியல் லாபத்துக்காக ஒதுக்கியவர் எடப்பாடி பழனிசாமி என்ற குற்றச்சாட்டும் நிர்வாகிகள் மத்தியில் வலுவாக உள்ளது. எனவே, அவரை மீண்டும் முதல்வராக ஆக்கும் முயற்சியில் பங்கேற்பதால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அரசியல் லாபமும் இல்லை என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. இந்த காரணங்களால் அமுமுக நிர்வாகிகள் பலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் டிடிவி தினகரனுக்கு கட்சிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மீறி கூட்டணியில் இணைந்தால் முக்கிய நிர்வாகிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக சொல்கின்றார் அமமுக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+