"என்னங்க இதெல்லாம்.. நான் இப்படி போறதுக்குள்ளேயேவா..".. பொருமலுடன் பேசிய சசிகலா.. கதிர்காமுவுடன்
கதிர்காமுவிடம் சசிகலா பேசும் ஆடிடியோ வெளியாகி உள்ளது
சென்னை: நைட்டி அணிந்த பெண்ணுடன், டாக்டர் கதிர்காமு, பெட்ரூமுக்குள் நுழைந்து ஜாலியாகவும் பேசி, வீடியோவும் வெளியானதே.. அவருடன் இப்போது சசிகலா பேசிஉள்ளார்.. அமமுகவில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வரும் கதிர்காமுவிடம், "என்னங்க இதெல்லாம்.. நான் இப்படி போறதுக்குள்ளேயேவா.." என்று சசிகலாவின் பொருமலுடன் அந்த ஆடியா வெளியாகி உள்ளது.
சசிகலா: கதிர்காமு எப்படி இருக்கீங்க?
கதிர்காமு : நல்லா இருக்கேன் அம்மா.. நீங்க நல்லா இருக்கீங்களா?
சசிகலா: நான் நல்லா இருக்கேன்.. வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
கதிர்காமு: நான் நல்லா இருக்கேன் வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்க.. என்னுடைய 2 பேரன்களுக்கு நீங்கதான்ம்மா பேர் வச்சீங்க.. போன தடவை எம்எல்ஏவாக இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்தப்பவும் நீங்கதான் விசாரிச்சீங்க.
சசிக்கலா: ஆமாம்
கதிர்காமு : நீங்கதான் என்ன எம்எல்ஏவுக்கு தேர்வு செஞ்சீங்க.. நானும் ஜெயிச்சு வந்தேன்.
சசிகலா: ஆமா ஆமா.. நீங்க எல்லாரும் சேர்ந்து கையெழுத்து போட்டுதானே இந்த அரசாங்கத்தை அமைக்க, அது வந்து மறந்துட்டா? நாம வந்து என்ன செய்ய முடியும்?
கதிர்காமு : ஆமாம்மா.. நீங்க கூட இதைப்பத்தி பேசி இருக்கீங்க
சசிகலா: ஆமா ஆமா
கதிர்காமு : 18 எம்எல்ஏக்களை நீக்கிட்டாங்க நீங்க சொல்லித்தான் அம்மா கையெழுத்து போட்டோம்.
சசிகலா: எப்படிங்க 18 எம்எல்ஏக்கள் நீக்குவது இந்த ஆட்சி வருவதற்கு கையெழுத்து போட்டவங்கதானே அத்தனைபேரும் எல்லாருமே அதிமுக காரங்க தானே அப்படி இருக்கும்போது எப்படி தூக்கி போடுறது?
கதிர்காமு : இந்த ஆட்சி வரக்கூடாதுன்னு நெனச்ச ஓபிஎஸ் ஐ சேர்த்துக்கிட்டு கொஞ்சம் மனிதாபிமானம் இல்லாமல் எங்களை நீக்கிட்டாங்கன்னா இதை மக்கள் ஏற்றுக் கொள்ளுவாங்களாமா?
சசிகலா: அது மட்டும் இல்ல.. நான் இங்க இருந்து புறப்படும் போது எனக்கு ஒரு தகவல் கொடுக்கிறார்கள், அந்த 11 பேரை நீக்கலாமானு.. அப்படி ஒரு தகவல் கொடுத்தார் வழியா வருது சபாநாயகர் சொன்னதாக தகவல்.. வாழ்வு.. அப்ப நான் சொல்றேன் இன்னைக்கு உங்க வீட்டுக்கு நான் போனாலும் ரெண்டு மூணு மாசத்துல நான் அத வந்து சரி பண்ணி இருக்கேன்.. அதனால அம்மா கஷ்டப்பட்டு உடல்நிலை சரியில்லாத நீங்க எல்லாம் பாத்து இருப்பீங்க..
அந்த சமயத்துல வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் இவங்க எல்லாம் ஒருத்தரை கூட இழக்கக்கூடாது.. பன்னீர்செல்வம் மட்டும்தான் என்ன பத்தி சொல்றாரு அதை விடுங்க.. அதெல்லாம் பார்க்க ஏன்னா சின்ன வயசிலேயே மனப்பக்குவத்தை நான் அம்மாவுக்கு எடுத்துச் சொல்லி இருக்கேன் அம்மாவை திட்டியவங்களையும் நாங்க சேர்த்தோம்.. அம்மாவுக்கு சில மன வருத்தம் இருந்துச்சு.. சிலர் மேல அதையெல்லாம் நினைக்க வேண்டாம் நாம வந்து பொதுச்செயலாளராக இருக்கும் அப்போ வருத்தமெல்லாம் வச்சுக்க கூடாது.. அப்படின்னு அம்மா கிட்ட சொல்லி இருக்கேன்.. அந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் பாத்துட்டு தான் வந்து இருக்கேன் கதிர்காமு

கதிர்காமு : சரிமா
சசிகலா: அதனால மனப்பக்குவம் சின்ன வயசுலயே தலைவர் மாதிரி வந்திருச்சு.. அதனால இது சாதாரண விஷயம் சரி பண்ணிடலாம்.. அப்படித்தான் நான் சொல்லிட்டு அவருக்கும் தகவல் தரேன்.. அதே மாதிரி யாரையும் பதவி நீக்க நாம எம்எல்ஏக்கள் தான் அவங்க அப்படின்னு அவர் சொன்னாலும் ஓபி வந்து எண்ணத் தானே சொல்றாரு.. பரவாயில்லை பாத்துக்கலாம்.. அவர்களையும் சரி பண்ணி கொண்டு வந்துடலாம்.. கற்றுக்கொள்ள எல்லாம் நல்லபடியா நடத்துங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் நான் போனேன்.. ஆனால் நான் போனதுக்கு அப்புறமா பார்த்தா 18 பேரையும் நீக்குவோம் அப்படின்னு வருது கொஞ்ச நாள்ல

கதிர்காமு : ஓபிஎஸ்ஸினால் நிறைய அவமானங்களை நாங்கள் சந்தித்தோம்
சசிகலா: அதாவது என்னன்னா, நாம வந்து ஒரு பெரிய முடிவு எடுத்து எல்லாரும் நல்லா இருப்போம்.. நல்லா இருக்கும்.. கட்சியை நினைக்கிறப்போ மன வருத்தங்களை ஒதுக்கி வைத்து கொள்ள வேண்டும்.. அதைத்தான் நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.. மூணு மாசத்துக்குள் சரி பண்ணி விடுவேன் அப்படின்னு சொல்லிட்டு தான் போனேன்.. அந்தத் தகவல் ஸ்பீக்கர் கேட்டபோது, அந்த மாதிரி பழக்கவழக்கம் தான் நான் வந்து யோசித்து தான் செய்யக்கூடிய ஆளு அவசரப்பட மாட்டேன்

கதிர்காமு : அரசியல் ஞானி நீங்க அம்மா
சசிகலா: ஆனா இந்த கையெழுத்து போட்டு 18 பேர்தான் இருக்காங்க அப்படின்னு கேள்விப்பட்டதும் இன்னும் இவங்களுக்கு பத்தல அப்படின்னு சிறைச்சாலையில் இருந்து யோசிக்கிறேன்-.. இது எங்கே போய் முடியும் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. நாமதானே ஆட்சியை கொண்டு வந்தோம்.. இனி தொண்டர்கள் பேச ஆரம்பிச்சுட்டாங்க மனக்குமுறல் கேட்க முடியுது.. அதனால தொண்டர்களை பார்க்க கிளம்பனும் அப்படின்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்.. இனி விடக்கூடாது இப்படி நம்ம முன்னால கட்சி மீனாவ பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணி விட்டேன்.. என்னை பொறுத்தவரையில் விரைவில் தொண்டர்களை சந்திக்க இருக்கின்றேன் கவலைப்படாதீங்க.. எல்லாரும் ஒண்ணு தான் எல்லோரும் குழந்தைகள்தான் கவலைப்படாதீங்க
கதிர்காமு : சரிமா வேகமா வாங்க..."

ஆடியோ
இப்படி அந்த ஆடியோ முடிகிறது.. யார் இந்த கதிர்காமு? பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு... இவர் தற்போது அமமுகவின் மருத்துவர் அணி தலைவராக இருக்கின்றார்.. இதுபோக, அமமுகவின் கழக அமைப்பு செயலாளராகவும் இருந்து வருகின்றார்.
Recommended Video

பெரியகுளம்
நடந்து முடிந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டவரும்கூட.. இவர்மீதுதான் அன்று ஆபாச கேஸ் ஒன்று எழுந்தது.. நைட்டி அணிந்த பெண் ஒருவர் பெட்ரூமுக்குள் வருவது போலவும், அவருடன் டாக்டர் கதிர்காமு ஜாலியாக இருப்பது போலவும் ஒரு வீடியோ பலமான ஆதாரத்துடன் சிக்கியது.. அதில் கதிர்காமுவின் உருவம் அச்சுஅசலாக தெரிந்தாலும், ஐயோ அது நானில்லை.. வீண்பழி, அரசியல் சூழ்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்றெல்லாம் பதறினார்..

செல்வாக்கு
கோர்ட், கேஸ் என்று வழக்கு விறுவிறுப்பாக சென்றாலும், கட்சியில் இவரது செல்வாக்கு கொஞ்சமும் குறையவில்லை.. அதனால்தான் தினகரன் நிறைய பொறுப்புகளை தந்து, சீட்டும் தந்தார்.. இத்தனை நாளும் தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் பேசி கொண்டிருந்த சசிகலா, அமமுகவின் கூடாரத்திற்குள்ளும் நுழைந்துள்ளது, அதிமுக தலைமையை மட்டுமல்ல, தினகரனுக்கே லேசான கலக்கத்தை தந்து வருகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications