அடகு வெக்க சொத்து இல்லை..பணம் கொடுத்தால்தான் தேர்தலில் போட்டி...தினகரனை மெர்சலாக்கிய நிர்வாகிகள்!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம்தான் செலவு செய்ய வேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உறுதியாக இருப்பதால் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தரப்பு அப்செட்டாகி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் அமமுகவும் தனித்து போட்டியிடும் என அறிவித்து விட்டார் டி.டி.வி. தினகரன்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களை போனில் தொடர்புகொண்டு, அனைத்து பதவிகளுக்கும் நம் கட்சியினரை களமிறக்க வேண்டும். அதற்கான வேட்பாளர் பட்டியலை உடனடி எனக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடைமுறைகளை துவக்குங்கள் என உத்தரவிட்டிருக்கிறார் தினகரன்.

தேர்தலை புறக்கணிக்கலாமே?
ஆனால், மா.செ.க்களோ, தேர்தல் பற்றிய சிந்தனையே நம் கட்சியினருக்கு இல்லை. தேர்தலை புறக்கணிக்கலாம். எப்படியும் திமுக தான் ஜெயிக்கப் போகிறது. இதற்கு எதற்கு நாம் உயிரைக் கொடுத்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என கேட்கிறார்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரனிடம் மா.செ.க்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் தினகரன்.

தேர்தல்னா தோல்விதான்
உடனே மாவட்ட செயலாளர்களிடம், '' நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தேர்தல்னா வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தானே வரும். அதற்காக தேர்தலை புறக்கணிக்கலாமா? வேட்பாளர்களை தயார்படுத்துங்கள் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளிடம் அந்தந்த மா.செ.க்கள் விவாதிக்க, எல்லோரும் ஒருமித்த குரலில், தினகரன் சொல்றதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. தேர்தல்னா வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனா, நமக்கு தோல்வி மட்டும் தானே கிடைச்சிக்கிட்டு இருக்கு.

பணம் கொடுத்தா போட்டி
சரி அதெல்லாம் விடுங்க. இப்போ எங்கக்கிட்டே தேர்தல் செலவு செய்ய காசு பணம் கிடையாது. அடமானம் வெக்கவோ, விக்கவோ பொருளோ சொத்துக்களோ எதுவும் கிடையாது. அதனால, தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை பணம் கொடுத்தால் போட்டியிடுவதை பத்தி எங்களுக்கு கவலையில்லை என்று தங்களின் எதார்த்த பொருளாதார நிலையை சொல்லியிருக்கிறார்கள்.

நிர்வாகிகளிடம் ஆர்வம் இல்லையாமே?
இதனை தினகரனிடம் மாவட்ட செயலாளர்கள் சொல்ல, அவர் செம அப்செட்டாம். அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தகுதியான வேட்பாளர்களை நிறுத்துங்கள் ; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். நாமினேசனுக்கு நாட்கள் குறைவாகத்தான் இருக்கு என்று சொல்லியிருக்கிறார் தினகரன். இதனையடுத்து மா.செ.க்கள் சுறுசுறுப்பு காட்டியுள்ளனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகிகளிடம் தான் அந்தளவுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications